பேட்டையை முந்தும் விஸ்வாசம்; எப்படி தெரியுமா?

  0
  2
  பேட்ட - விஸ்வாசம்

  ‘பேட்ட’ திரைப்படத்திற்கு முன்பாகவே அஜித்தின் ‘விஸ்வாசம்’ திரைப்படம் வெளியாகவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

  சென்னை: ‘பேட்ட’ திரைப்படத்திற்கு முன்பாகவே அஜித்தின் ‘விஸ்வாசம்’ திரைப்படம் வெளியாகவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ திரைப்படமும், தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம் திரைப்படமும் ஒரே நாளில் (ஜன.10) உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினி, அஜித் படங்கள் ஒரே தேதியில் ரிலீசாவது இதுவே முதன்முறை என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

  இரண்டு திரைப்படங்களுமே மாஸான கதையுடன் களமிறங்கவுள்ளதால், இரு நட்சத்திரங்களின் ரசிகர்களும் உச்சக்கட்ட எதிர்ப்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில், ‘பேட்ட’ திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி ஜன.10ம் தேதி அதிகாலை 4 மணிக்கு திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

  ஆனால், அதற்கு முன்பாக ஜன.10ம் தேதி அதிகாலை 1 மணிக்கே அஜித்தின் ‘விஸ்வாசம்’ திரைப்படம் வெளியாகவுள்ளதாக பிரபல திரையரங்கின் உரிமையாளர் தெரிவித்துள்ளார் இரு படங்களின் டிக்கெட் முன்பதிவு நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், சென்னை ரோகினி திரையரங்கின் உரிமையாளர் நிகிலேஷ் சூர்யா,’அதிகாலை 1 மணிக்கு திரையிட அனுமதி கிடைத்தால் எங்களது எல்லா திரையரங்கிலும் விஸ்வாசம் திரையிடப்படும், 4 மணிக்கு பேட்ட திரையிடப்படும்என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.