பேட்டரி டார்ச் உடன் அலையும் கமல்

  0
  2
  கமல்ஹாசன்

  மக்களவை தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டது. இதை மக்கள் மனதில் பதிய வைக்க கமல் படாத பாடுபட வேண்டியுள்ளது.

  மக்களவை தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டது. இதை மக்கள் மனதில் பதிய வைக்க கமல் படாத பாடுபட வேண்டியுள்ளது.

  மக்களவை தேர்தல் நெருங்கிவிட்டதால், அரசியல் கட்சிகள் அனைத்தும் பிரச்சாரம் மற்றும் கூட்டணி வேலைகளில் பிஸியாக உள்ளது. புதிதாக கட்சி துவங்கியிருப்பவர்களும், நிரந்தர சின்னம் இல்லாதவர்களும் தங்கள் சின்னத்தை மக்கள் மனதில் பதிய வைக்க போராட வேண்டியுள்ளது. அந்த வகையில் கமல்ஹாசனும் சிரமப்பட்டு வருகிறார். கமல்ஹாசன் எல்லா இடங்களுக்கும் பேட்டரி டார்ச் உடல் அலைகிறார், பத்திரிகையாளர்களுக்கு டார்ச் அடித்துக்காட்டும் நிலைமை ஆகிவிட்டது.

  kamal

  பேட்டரி டார்ச் சின்னம் கிடைத்தவுடன் போட்டோஷூட் செய்து டிரெண்டாக்கிய கமல், பேட்டரி டார்ச் தேசத்துக்கு புது ஒளி பாய்ச்சும் என அவர் ஸ்டைலில் பொன்மொழி கூறவும் தவறவில்லை. எப்படி இருந்த கமல் இப்படி ஆகிட்டார் என சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர்.