பெற்ற மகளை 1.5 லட்சத்துக்கு விற்ற தந்தை ! 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் !

  0
  5
  child marriage

  குஜராத் மாநிலத்தில் குடிபோதைக்கு அடிமையான நபர் தனது 10 வயது மகளை தன்னை விட மூத்தவருக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  குஜராத் மாநிலத்தில் குடிபோதைக்கு அடிமையான நபர் தனது 10 வயது மகளை தன்னை விட மூத்தவருக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 10 வயது சிறுமியை பணத்திற்காக 37 வயது நபருடன் திருமணம் செய்து வைத்ததாக ஒரு வீடியோ வைரலாகி கொண்டிருந்தது.

  childmarriage

  இதுகுறித்து சமூக ஆர்வலர் தந்த புகாரில் அதிரடி சோதனை மேற்கொண்ட குற்றப்பிரிவு போலீசார் ஆஸ்வரா கிராமத்தில் புதுமணப்பெண்ணாக வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 10 வயது சிறுமியை மீட்டனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டபோது குடிபோதைக்கு அடிமையான அந்த சிறுமியின் தந்தை இடைத் தரகர் மூலம் தன்னுடைய மகளை 1.5 லட்சத்திற்கு விற்பதாக ஒப்புக்கொண்டுள்ளார். இதற்கு முதற்கட்டமாக மாப்பிள்ளை வீட்டில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸாக பெற்றுக்கொண்டுள்ளார். 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுத்துவிட்டு மீதிப் பணம் தராததால் சிறுமியின் தந்தை தகராறு செய்துள்ளார். இதை அந்த தரகர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் போட்டுவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன சிறுமியின் தந்தை மாட்டிக்கொண்டால் சிறைக்க சென்றுவிடுவோம் என அமைதியாக இருந்துள்ளார். ஆனால் அந்த வீடியோ எப்படியோ வைரலாக தற்போது அனைவரும் மாட்டிக்கொண்டனர். சிறுமி மீட்கப்பட்டு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். குழந்தைகளுக்கு எதிராக செயல்பட்டதால் மணமகன், தரகர், சிறுமியின் தந்தை ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.