பெற்ற மகளுக்கு உணவில் விஷம் வைத்த பெற்றோர்: தருமபுரியில் பரபரப்பு!

  0
  9
  child marriage ttn

  பள்ளி மாணவிக்குப் பெற்றோரே விஷம் கலந்த உணவு கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  தருமபுரி: பள்ளி மாணவிக்குப் பெற்றோரே விஷம் கலந்த உணவு கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  தருமபுரி அருகே அரசுப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயின்று வரும் 16 வயது மாணவிக்கு அவரது பெற்றோர்கள் திருமண ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் மாணவி படிக்க விரும்புவதாகக் கூறி, திருமணத்துக்கு மறுத்ததாகக் கூறப்படுகிறது. மாணவியின் பெற்றோர்கள் வயதானவர்கள் என்பதாலும், மாணவிக்கு மேலும் 3 சகோதரிகள் இருப்பதாலும் திருமண ஏற்பாடு செய்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் மாணவியை அவரது பெற்றோர் தொடர்ந்து வற்புறுத்தி  வந்துள்ளனர். இருப்பினும் மாணவி திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் அவரது பெற்றோர் மாணவி மீது கோபமடைந்துள்ளனர்.

  marriage ttn

  இந்நிலையில் நேற்று காலை மாணவிக்கு பள்ளிக்குக் கொடுத்தனுப்பிய மதிய உணவில் எதையோ கலந்து கொடுத்துள்ளனர். இதைக் கண்ட, மாணவியின் தங்கை, உணவில் விஷத்தைக் கலந்துள்ளனர். அதைச் சாப்பிட வேண்டாம் என  எச்சரித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பெண், இது குறித்து மகேந்திரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கூறியுள்ளார்.

  இதனைத்தொடர்ந்து குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பினர் மற்றும் காவல்துறையினர் மாணவியின் பெற்றோரிடம், மேற்கொண்ட விசாரணையில் உணவில் விஷம் கலந்து கொடுத்தது உறுதியானது. எனவே, மாணவியின் தாய், தந்தை இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.