பெற்ற குழந்தையை நான்காவது மாடியிலிருந்து தூக்கி வீசி கொன்ற தாய்: அதிர வைக்கும் காரணம்!

  0
  14
  குழந்தையின் தாய்

  குழந்தையைப் பெற்ற தாயே நான்காவது மாடியிலிருந்து கீழே தூக்கி வீசுவது பதிவாகி இருந்தது.

  லக்னோ: மூன்று மாத  குழந்தையை மாடியிலிருந்து தூக்கிவீசிக் கொன்ற தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.

  லக்னோவை சேர்ந்த தம்பதிக்குக் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. குழந்தை உடல்நிலை சரியில்லாமல் போக சிகிச்சைக்காக கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவமனையில் குழந்தையை அதன் பெற்றோர் அனுமதித்தனர். மருத்துவர்களின் பரிசோதனையில் குழந்தைக்கு மஞ்சள் காமாலை இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் குழந்தைக்கு தொடர் சிகிச்சையளிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

  lucknow

  இந்நிலையில் குழந்தையைக் காணவில்லை என்று கூறி குழந்தையின் தாய் மருத்துவமனை நிர்வாகத்தில் புகார் கூறியுள்ளார். இதனால் மருத்துவமனை நிர்வாகம் போலீசாருக்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் குழந்தையைப் பெற்ற தாயே நான்காவது மாடியிலிருந்து கீழே தூக்கி வீசுவது பதிவாகி இருந்தது. இதனால் போலீசார் உள்பட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

  murder

  இதையடுத்து குழந்தையை கொன்ற அந்த பெண் மீது அவரது கணவர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த பெண்ணை கைது செய்தனர். இதுகுறித்து அப்பெண் அளித்துள்ள வாக்குமூலத்தில், குழந்தைக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதனால் இனிமேல் சிகிச்சையளித்து பலனில்லை என்று நினைத்துத் தான் தூக்கி வீசியதாகக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் மருத்துவமனை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.