பெற்ற குழந்தையின் கழுத்தை, நெரித்து கதற வைத்த வனிதா! வைரல் வீடியோ 

  0
  5
  வனிதா

  வனிதா பெற்ற குழந்தையின் கழுத்தை இழுத்துள்ளது போல் வீடியோ வெளியாகியுள்ளது. 

  சென்னை: வனிதா பெற்ற குழந்தையின் கழுத்தை இழுத்துள்ளது போல் வீடியோ வெளியாகியுள்ளது. 

  பிக் பாஸ் 3  நிகழ்ச்சியில் போட்டியாளர்களை தன்னுடைய வாயல் கட்டுப்படுத்த நினைப்பவர் வனிதா. அவரின் அடாவடிகள் சக போட்டியாளர்களை மட்டுமின்றி பார்வையாளர்களையும் எரிச்சலடைய செய்கிறது. ஒன்றுமே இல்லாத விஷயத்தைப் பெரிது செய்து, அனைத்து விஷயங்களிலும் தலையிட்டு பிக் பாஸ் வீட்டையே சந்தை கடை போல் ஆக்குவது தான் இவரது வழக்கம். 

  தனது குரல் தன்மை மூலம் மற்றவர்களை டாமினேட் செய்வது, மற்றவர்கள் கருத்தைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் தான் சொல்வதை மட்டுமே அனைவரும் கேட்க வேண்டும் என்ற எண்ணத்தால் தொடர்ச்சியாகக் கேட்ட பெயரைச் சம்பாதித்து வருகிறார். 

  தற்போது இவரின் பழைய வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் உலா வரும் நிலை தொடங்கியுள்ளது. அதில் வனிதா தனது மகனை அவரின் அப்பா விஜய் குமாரிடம் இருந்து பறிப்பதற்காக மிகவும் மோசமாக ரோட்டில் சண்டை போட்டுள்ளார். அப்போது ஸ்ரீ ஹரி வர மறுத்ததால் பெற்ற குழந்தை என்றும் பார்க்காமல் வனிதா மிகவும் மோசமாக அவரின் கழுத்து பகுதியை பிடித்து இழுத்துள்ளது போல் அந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. 

  இவரின் செயலை பார்த்து குழந்தையே தனது தாயிடம் போக விருப்பமின்றி அழுது ஆடம் பிடித்துள்ளார். 
  மேலும் பெற்ற குழந்தையிடமே இவர் இப்படி மோசமாக நடந்து கொண்ட அந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.