பெரும்பான்மை கணிப்பின்படி மோடி அலை இன்னும் ஓயவில்லை

  0
  1
  மோடி

  பெரும்பாலான முன்னணி செய்தி நிறுவனங்களின் எக்சிட் போல் முடிவுகள் வெளியாகிவிட்டன. சொல்லி வைத்தாற் போல் அனைத்து நிறுவனங்களும் பாஜக கூட்டணியே திரும்பவும் ஆட்சிக்கு வரும் என்று கணித்துள்ளன. பெரும்பான்மைக்கு தேவையான 272 தொகுதிகளை பெறுவதில் பாஜகவுக்கு எந்த சிரமமும் இருப்பதாக தெரியவில்லை. ரிப

  modi

  பெரும்பாலான முன்னணி செய்தி நிறுவனங்களின் எக்சிட் போல் முடிவுகள் வெளியாகிவிட்டன. சொல்லி வைத்தாற் போல் அனைத்து நிறுவனங்களும் பாஜக கூட்டணியே திரும்பவும் ஆட்சிக்கு வரும் என்று கணித்துள்ளன. பெரும்பான்மைக்கு தேவையான 272 தொகுதிகளை பெறுவதில் பாஜகவுக்கு எந்த சிரமமும் இருப்பதாக தெரியவில்லை. ரிபப்ளிக் டிவி 287 இடங்களையும், ரிபப்ளிக் பாரத் 305 இடங்களையும், நியூஸ் நேஷன் 282 முதல் 290 இடங்களையும், டைம்ஸ் நவ் 306 இடங்களையும், டுடேஸ் சாணக்யா மிக அதிகபட்சமாக 340 இடங்களையும், சுதர்ஷன் நியூஸ் 313 இடங்களையும் பாஜக கூட்டணிக்கு சாதகமாக கணித்துள்ளன. இதுவரை வெளியான கணிப்புகளிலேயே முதன்முறையாக எந்த கூட்டணிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்காது என நியூஸ் எக்ஸ் நேத்தா மட்டும் கணிப்பு வெளியிட்டுள்ளது.

  dmk

  தமிழகத்தைப் பொறுத்தவரை, திமுக கூட்டணி மிக அதிக இடங்களில் வெற்றி பெறும் என்பதே எல்லா நிறுவனங்களின் கணிப்பாக உள்ளது. இந்தியா டுடே கணிப்பின்படி, திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளையும் கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது