பெரும்பான்மையை நிரூபி – பாஜக டிமாண்ட்

  0
  1
  மோடி

  கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற மத்திய பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 தொகுதிகளை வென்று, தனிப்பெரும் கட்சியாக வந்திருந்தாலும், பெரும்பான்மைக்கு ஒரு சீட் குறைவாக போய்விட்டது

  கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற மத்திய பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 தொகுதிகளை வென்று, தனிப்பெரும் கட்சியாக வந்திருந்தாலும், பெரும்பான்மைக்கு ஒரு சீட் குறைவாக போய்விட்டது. தொடர்ச்சியாக ஆட்சியை தக்கவைத்துக்கொண்டு வந்திருந்த பாஜக, காங்கிரஸுக்கு மிக நெருக்கமாக 109 தொகுதிகளில் வென்றது. இறுதி பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் தங்களின் தலா ஒரு எம்.எல்.ஏவை காங்கிரஸுக்கு தானம் தந்து ஆட்சிக்கு வழிவகுத்தது.

  mayavati

  மத்தியில் ஆட்சியை கையில் வைத்திருப்பதால், காங்கிரஸ் இல்லாத பாரதம் என்ற கனவை நோக்கி வேகமாக நடைப்போட்டு, எப்பாடுபட்டாவது பாஜக அல்லது அதன் கூட்டணி கட்சிகளை ஆட்சிக்கட்டிலில் அமரவைத்தது. கோவா உள்ளிட்ட பல மாநிலங்கள் இதற்கு சான்று. தற்போது, நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என்று கட்டியம் கூறுவதால், தெம்பு பெற்றுள்ள பாஜக, மைனாரிட்டி காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என சவால் விடுத்துள்ளன.

  rahul

  கடந்த கால வரலாறு மற்றும் தமிழகத்தில்  நடப்பதை எல்லாம் வைத்துப் பார்த்தால், அறுதி பெரும்பான்மை இருக்கிறதோ இல்லையோ, மத்தியில் ஆளும் ஆட்சியின் ஆசிர்வாதம் போதும் ஆட்சி தொடர. எனவே, மே 23ஆம் தேதி வெளியாக இருக்கும் தேர்தல் முடிவுகள், தமிழகம், கோவா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களின் ஆட்சி கவிழ்ப்பிற்கோ அல்லது தொடர்வதற்கோ காரணமாக இருக்கப்போகிறது.