பெருமாளுக்கு சீர் கொண்டுவரும் இஸ்லாமியர்கள்.

  34
  ஸ்ரீமுஷ்ணம் ஆதிவராக சாமி கோவில்

  சிதம்பரத்தை அடுத்த கிள்ளை முழுக்கு துறையில் கடந்த 300 ஆண்டுகளாக இந்த அதிசயம் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மாசிமகத்தின் போது கிள்ளை முழுக்கு துறைக்கு அருகில் உள்ள ஆலயங்களின் உற்சவர்கள் வந்து பக்தர்களுக்கு தீர்த்தவாரி வழங்குவர். நீத்தார் கடன் செய்ய வரும் பொதுமக்களும் கூடுவர்.

  srimushnam

  இந்த நிகழ்வில்,இந்தப்பகுதியில் புகழ்பெற்ற தலமான ஸ்ரீமுஷ்ணம் ஆதிவராக சாமி கோவிலில் இருந்து பெருமாளும் வந்து தீர்த்தவாரி வழங்குவார்.அப்படிப் பெருமாள் நேற்று கிள்ளைக்கு வந்த போது கிள்ளை தர்கா டிரஸ்ட் சார்பில் அதன் தலைவர் சையது சாக்காப் மற்றும் டிரஸ்ட்டிகள், உள்ளூர் இஸ்லாமிய மக்கள் மேளதாளத்துடன் பெருமாளை எதிர் கொண்டு வரவேற்று, பட்டு,பச்சரிசி,தேங்காய் , பழம் சீர் கொடுத்தனர்.அதைத் தொடர்ந்து கிள்ளை இஸ்லாமியருக்காக பூவராக சாமி கொண்டுவந்த நாட்டுச்சர்கரை பூமாலை ஆகியவை எதிர் மறியாதையாக வழங்கப்பட்டது.

  killai-theerthavari

  அந்த நாட்டுச் சர்க்கரையும் பூவும் கிள்ளை தர்காவுக்கு எடுத்துவரப்பட்டு, பாத்தியா ஓதி அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில் உள்ளூர் இஸ்லாமியர்கள், கோவில் பட்டாச்சாரியர்கள்,கிள்ளை ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.இது குறித்து கிள்ளை இஸ்லாமிய டிரஸ்ட்டின் தலைவர் சையது சாக்கப் சொல்லும் போது ‘ இந்து இஸ்லாமியர் ஒற்றுமை தொடர்ந்து பேனப்பட வேண்டும் என்பதற்காக 300 வருடம் முன்பு இருந்தே பூவராகசாமிக்கு இங்குள்ள மக்கள் வரவேற்பு அளித்து வருகிறார்கள்.’ என்றார்.

  இது போல தமிழகமெங்கும் நடந்து வரும் நிகழ்வுகளில் வெளி ஆட்களோ, அரசியல் கட்சியினரோ தலையிடாமல் அரசு கண்காணிக்க வேண்டும்.