பெரியார் குறித்துப் பேசும் போது யோசித்துப் பேசுங்கள் : ரஜினிக்கு மு.க ஸ்டாலின் வேண்டுகோள் !

  0
  2
  rajini kanth - mk stalin

  1971-ல் பெரியார் நடத்திய பேரணி குறித்துத் தான் பேசினேன். இதற்காக நான் மன்னிப்பு கேட்க முடியாது என்று ரஜினி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

  சில நாட்களுக்கு முன்னர்  துக்ளக் இதழின் விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், பெரியார் தலைமையில் ராமர், சீதையின் உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலம் கொண்டு செல்லப்பட்டது என்று கூறினார். இதற்கு, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பல தரப்பினர் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

  ttn

  அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, நான் தவறான விஷயம் ஏதும் சொல்லவில்லை.1971-ல் பெரியார் நடத்திய பேரணி குறித்துத் தான் பேசினேன். இதற்காக நான் மன்னிப்பு கேட்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். எனவே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் ரஜினிகாந்த்  கூறுகையில் ,துக்ளக் விழாவில் நான் கற்பனையாக எதுவும் பேசவில்லை.தன்னுடைய பேச்சுக்கு,மன்னிப்போ,வருத்தமோ தெரிவிக்க முடியாது திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

  ttn

  இன்று மு.க ஸ்டாலின் தலைமையில் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் செயற்குழு அவசர கூட்டம் நடைபெற்றது. அதில், கட்சியின் ஆக்கப்பணி கள் குறித்து திமுக நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். அந்த கூட்டம் முடிந்த பின்னர் நடிகர் ரஜினிகாந்த்தின் சர்ச்சை பேச்சு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க ஸ்டாலின், நண்பர் ரஜினி அரசியல்வாதி கிடையாது. அவர் ஒரு நடிகர். அவரிடம் நான் விரும்பி கேட்டுக்கொள்வது, 95 ஆண்டுக்காலம் தமிழினத்திற்காகவும் தமிழ் மக்களுக்காகவும் போராடிய பெரியாரைப் பற்றிப் பேசும் போது யோசித்து, சிந்தித்துத் தான் பேச வேண்டும் என்று கூறினார்.