பெண் விருந்தினர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய பல்கலை. ! மாணவர்கள் தப்பித்தால் போதும் என ஓடிவந்த பாஜக பெண் அமைச்சர் !

  0
  2
  அக்னி மித்ரா

  பல்கலைக்கழகங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என மத்தியில் அங்கம் வகிக்கும் பாஜகவில் இருக்கும் பெண் பிரமுகர் ஒருவரே புகார் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

  மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில் உள்ளது ஜாதவ்பூர் பல்கலைகழகம்.  ஏபிவிபி அமைப்பு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியியில் மத்திய இணை அமைச்சர் பாபுல் சுப்ரியோ,  பாஜக பெண் பிரமுகர் அக்னி மித்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்

  பல்கலைக்கழகங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என மத்தியில் அங்கம் வகிக்கும் பாஜகவில் இருக்கும் பெண் பிரமுகர் ஒருவரே புகார் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

  agni mitra

  மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில் உள்ளது ஜாதவ்பூர் பல்கலைகழகம்.  ஏபிவிபி அமைப்பு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியியில் மத்திய இணை அமைச்சர் பாபுல் சுப்ரியோ,  பாஜக பெண் பிரமுகர் அக்னி மித்ரா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு முடிந்த  சில நேரங்களில் மத்திய இணை அமைச்சர் பாபுல் சுப்ரியோவையும், பாஜக பெண் பிரமுகர் அக்னி மித்ராவையும் சிலர் சூழ்ந்து கொண்டு தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. மாணவர்கள் என்ற பெயரில் சில ரவுடிகள் இருபெண்களையும் தாக்கியது மட்டுமின்றி பாஜக பெண் பிரமுகர் அக்னி மித்ராவின் ஆடைகளை கிழித்து உடல் ரீதியாக மானபங்கப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. 

  ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கும் பல்கலைக்கழகத்தில் தான் மானபங்கப்படுத்தப்பட்டேன், அவதூறாக பேசப்பட்டேன் என அக்னி மித்ரா பவுல் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.. 

  agni mitra

  பல்கலைக்கழகத்தில் ஒரு மத்திய இணை அமைச்சரும், பாஜக பெண் பிரமுகரும் சுமார் 4 மணிநேரம் அவர்களுக்கும், அவர்களது கண்ணியத்திற்கும் பாதுகாப்பு இல்லாமல் இருந்ததாக அவர் குற்றம் சாட்டி உள்ளார். மத்திய அரசில் அங்கம் வகிக்கும் பெண் இணை அமைச்சருக்கே இந்த கதி என்றால் பல்கலைக் கழகத்தில் பயிலும் மற்ற மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக் குறிதான் என பகிரங்கமாக பேசி உள்ளார் பாஜக பெண் பிரமுகர் அக்னி மித்ரா.