பெண் மருத்துவர் பலாத்காரம் செய்து கொலை ! விரைந்து தண்டனை தர தெலுங்கானாவில் சிறப்பு நீதிமன்றம் !

  0
  8
  பிரியங்கா ரெட்டி

  நள்ளிரவில் தனியாக சென்ற பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொலை ! தெலுங்கானாவில் நேர்ந்த பயங்கரம் !

  தெலுங்கானாவில் கால்நடை பெண் மருத்துவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொல்லப்பட்ட வழக்கை விரைந்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
  தெலுங்கானா மாநிலம் ஷாம்ஷாபாத் பகுதியைச் சேர்ந்த கால்நடை மருத்துவரான பிரியங்கா ரெட்டி

  நள்ளிரவில் தனியாக சென்ற பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொலை ! தெலுங்கானாவில் நேர்ந்த பயங்கரம் !

  priyanka reddy

  தெலுங்கானாவில் கால்நடை பெண் மருத்துவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொல்லப்பட்ட வழக்கை விரைந்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
  தெலுங்கானா மாநிலம் ஷாம்ஷாபாத் பகுதியைச் சேர்ந்த கால்நடை மருத்துவரான பிரியங்கா ரெட்டி  மெஹபூப் நகர் மாவட்டம், கொல்லூர் கிராமத்தில் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த வாரம் இரவு வீட்டிற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது டயர் பஞ்சர் ஆனதால் லாரி ஓட்டுநரின் உதவியை நாடி உள்ளார். இதற்கிடையே மர்மநபர்கள் சிலர் பிரியங்கா தனிமையில் இருப்பதை பார்த்து நோட்டமிட்டுள்ளனர். இதனால் பயந்து போன பிரியங்கா தன்னுடைய தங்கைக்கு போன் செய்து டயர் பஞ்சர் ஆகி வழியில் நிற்பதாக கூறியுள்ளார். அதே சமயம் தன்னை மர்ம நபர்கள் நோட்டமிடுவதாகவும் பயந்து கொண்டே சொன்னார். இதையடுத்து பெற்றோர் பிரியங்காவை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையே போலீசார அவரை தேடி வந்த நிலையில் ஹைதராபாத் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஷாத்நகர் மேம்பாலத்திற்குக் கீழே எரித்துக் கொல்லப்பட்ட நிலையில் பிரியாங்கவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. பிரியங்காவின் உடலை உடற்கூறாய்வு செய்ததில், அவர் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, எரித்துக் கொல்லப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்தது. இந்நிலையில், பிரியங்காவின் வாகனத்திற்கு பஞ்சர் பார்த்ததாகக் கூறிய, லாரி ஓட்டுநரையும், கிளினரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

  priyanka reddy

  இந்நிலையில் மகபூப்நகர் மாவட்ட நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு விசாரணை இன்று வந்தது. அப்போது நீதிபதி, இந்த வழக்கு மற்ற வழக்குகள் போல் இல்லாமல் உடனடியாகவும், விரைவாகவும் விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை தருவதற்கு வசதியாக சிறப்பு நீதிமன்றம் அமைக்க உத்தரவிடுவதாக தெரிவித்தார். இதை பலரும் பாராட்டினர்.