பெண் மயமான பின்லாந்து! இளம்வயது பிரதமர்..!

  12
  சன்னா

  மீப காலமாகவே எல்லா துறைகளிலும் பெண்களின் பங்களிப்பும் சாதனைகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனைப் பார்க்கும்போது பெண்களால் முடியாத காரியம் எதுவும் இல்லை என்பது நிரூபணமாகியிருக்கிறது.

  சமீப காலமாகவே எல்லா துறைகளிலும் பெண்களின் பங்களிப்பும் சாதனைகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனைப் பார்க்கும்போது பெண்களால் முடியாத காரியம் எதுவும் இல்லை என்பது நிரூபணமாகியிருக்கிறது.

  finland

  அன்னை தெரசாவில் தொடங்கி மேரி கொம், கல்பனா சாவ்லா, சானியா மிர்சா, இளவேனில் என சாதனை பெண்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. அந்தவகையில், பின்லாந்தில் இளவயது பெண்ணான சன்னா மாரின் பிரதமராக நியமிக்கபட்டுள்ளார்.

  finland

  இவருக்கு வயது 34. இதன்மூலம் உலகின் இளவயது பிரதமர் என்ற பெருமையை சன்னா பெருகிறார். போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்த இவர், தற்போது பின்லாந்தின் ஆளும் ஜனநாயக கட்சியால் பிரதமராக தேர்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் பின்லாந்தின் மூன்றாவது பெண் பிரதமராவார். அதுமட்டுமின்றி ஆட்சியில் இருக்கும் கூட்டணி கட்சியை சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் 35 வயதிற்கு உட்பட்டவர்களே. இவர்கள் அனைவரும் பிரதமர் பதவிக்கு போட்டியிட்டனர். இவர்களில் சன்னா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.