பெண் காவலரை ஏமாற்றி கர்ப்பமாக்கிய காவலர் கைது!

  32
  Love

  திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பெண் காவலரை கர்ப்பமாக்கிவிட்டு, பள்ளிப்பருவ காதலியைத் திருமணம் செய்த காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பெண் காவலரை கர்ப்பமாக்கிவிட்டு, பள்ளிப்பருவ காதலியைத் திருமணம் செய்த காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  விழுப்புரம் அருகே உள்ள காணை கிராமத்தை சேர்ந்தவர் ராஜலட்சுமி, இவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் 12 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போது அதே பள்ளியில் அவருடன் படித்துவந்த கருங்காலிப்பேட்டையைச் சேர்ந்த சரத்குமாரை காதலித்துள்ளார். அதன்பின் சரத்குமார் காவலர் பணியில் சேர்ந்து தற்போது விழுப்புரம் ரயில்வே காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் போலீஸ் வேலையில் சேர்ந்த பிறகு, அவருடன் பணிபுரியும் பிரியங்கா என்ற பெண்ணை காதலிப்பதாக கூறி அவருடன் நெருக்கமாக இருந்துள்ளார். 

  Love

  இதனையறிந்த ராஜலட்சுமி, சரத்குமார், பிரியங்கா ஆகியோர் மீது புகார் அளித்தார். இதையடுத்து அவர்கள் இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், வெள்ளிக்கிழமை விழுப்புரம் பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு ராஜலட்சுமியை அழைத்துச்சென்று சரத்குமார் திருமணம் செய்து கொண்டார். இதனை கேள்விப்பட்ட பிரியங்கா அதிர்ச்சியில் உறைந்தார். உடனே அவரும் விழுப்புரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில், கடந்த 2 வருடமாக சரத்குமாரும், தானும் காதலித்து வருவதாகவும், திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைக்கூறி சரத்குமார், பலமுறை தனிமையில் இருந்ததாக கூறியுள்ளார். இதனால், தான் 4 முறை கர்ப்பமடைந்து, சரத்குமாரின் வற்புறுத்தலின் பேரில் கருக்கலைப்புச் செய்ததாகவும் பிரியங்கா கூறியுள்ளார். தற்போது மீண்டும் கர்ப்பமாக இருப்பதாகவும் 7 மாதம் கர்ப்பமாக இருக்கும் தன்னை ஏமாற்றிவிட்டு ராஜலட்சுமியை திருமணம் செய்துகொண்டதாகவும்  கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதையடுத்து சரத்குமாரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.