பெண் ஊழியருக்கு முத்தம் கொடுத்த இளைஞர்: கதறி அழுத பெண்; சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு!

  0
  9
  முத்தம்

  விமான நிலைய பெண் ஊழியருக்கு முத்தமிட்ட நபர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

  சென்னை: விமான நிலைய பெண் ஊழியருக்கு முத்தமிட்ட நபர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

  airport

  சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து துபாய் செல்லும் தனியார் பயணிகள் விமானம் நேற்று காலை 7.30 மணிக்கு புறப்பட இருந்தது. இதனால் பயணிகள் அங்கு சற்று பரபரப்பாக காணப்பட்டனர்.  கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த முகமது செரீப் என்பவர் துபாய் செல்ல இருந்ததால், கவுன்டரில் போர்டிங் பாஸ் வாங்க தனது இ-டிக்கெட்டை கொடுத்தார். கவுன்டரில் இருந்த 23 வயது பெண் ஊழியர் 
  ஒருவர் போர்டிங் பாஸ் எடுத்து கவுன்டர் வழியாகப் பயணி முகமது செரீப்பிடம் கொடுத்தார். அப்போது அவரது கையை பிடித்த முகமது செரீப் அவரது கையில் முத்தம் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் கதறி அழ அந்த இடமே பதற்றமாக மாறியது. 

  arrested

  ஆனால் முகமது முகமது செரீப் அங்கிருந்து ஓடி ஒளிய  அவரை கண்டுபிடித்த அதிகாரிகள் அவரை கவுண்ட அருகே அழைத்து வந்து விசாரித்தனர். ஆனால்  முகமது செரீப்போ தான் அப்படிச் செய்யவில்லை. அந்த பெண் பொய் பேசுகிறார் என்று கூறினார். இதையடுத்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை அதிகாரிகள்  சோதனையிட்ட  போது, அவர் அந்த பெண் ஊழியருக்கு முத்தம் கொடுத்தது அப்பட்டமாகத் தெரிந்தது. இதைத் தொடர்ந்து செரீப் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். 

  arrest

  இதனை காரணமாக முகமது செரீபின் துபாய் பயணம் ரத்து செய்யப்பட்டது. போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் துபாயில் சூப்பர் வயசராக  வேலைபார்த்து வந்த இவர் 2 மாதம் விடுமுறைக்காகச் சென்னை வந்ததும், திரும்ப துபாய்க்கு போக விமான நிலையத்துக்கு வந்த போது  தான் இந்த செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. தொடர்ந்து முகமது செரீப்பிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.