பெண்ணை காதலிப்பது என் அக்காவுக்கு பிடிக்கவில்லை: பணம் கேட்டு மிரட்டுகிறார்: டுட்டி சந்த் பரபரப்பு புகார்!

  0
  5
  டுட்டி

  தனது சகோதரி பணம் கேட்டு தன்னை மிரட்டுவதாக டுட்டி சந்த்  பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 

  ஒடிசா: தனது சகோதரி பணம் கேட்டு தன்னை மிரட்டுவதாக டுட்டி சந்த்  பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 

  ஒடிசாவை சேர்ந்தவர் டுட்டி  சந்த். 23 வயதான இவர் கடந்த ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று 2 வெள்ளிப்பதக்கங்களை இந்தியாவிற்கு வென்று பெருமை தேடி கொடுத்தார். இவருக்கு ஆண்மை தன்மை இருப்பதாகக் கூறி சில ஆண்டுகளுக்கு முன்பு தடகள போட்டிகளில் பங்கேற்கத் தடைவிதிக்கப்பட்டது. ஆனால்  இந்த தடையானது  2015ம் ஆண்டு தகர்க்கப்பட்டது.

  dutee

  இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூறியிருந்தார். மேலும் விருப்பத்துக்கு எனது பெற்றோரே எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் என்னுடைய சகோதரி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.என் துணையைத் தேர்ந்தெடுக்க எனக்கு உரிமை உண்டு’ என்று கூறியிருந்தார். 

  dutee

  இந்நிலையில் நேற்று  புவனேஸ்வரில் டுட்டி சந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், எனது சகோதரி 25 லட்சம் ரூபாய் கேட்டு என்னை மிரட்டுகிறார். பணம் கேட்டு சில சமயங்களில் அடிக்கவும் செய்கிறார். திருமணத்திற்குப் பிறகு நான் என் குடும்பத்தைக்  கவனிக்க மாட்டேன் என்று நினைக்கிறார்கள். ஆனால்  அவர்களுக்கு என்ன வேண்டும் என்பது எனக்குத் தெரியும். அதனால் அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வேன்’ என்றார். ஆனால்  இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள டுட்டி சந்த் சகோதரி, பணத்துக்காக அவளைத் தவறான பாதைக்கு அழைத்து செல்கிறார்கள் என்று கூறினார். 

  dutee

  முன்னதாக   டுட்டி  தாயார் அக்கோஜி, ‘எனது மகள்,  என் பேத்தியை அவள் விரும்புகிறாள். எனக்குப் பேத்தி என்றால் அவளுக்கு மகள். அப்படி இருக்கும் போது, ஒரு மகளைத் தாய் திருமணம் செய்து கொள்வதை இந்த சமூகம் ஏற்றுக்கொள்ளுமா? என்று கூறி அதிர்ச்சியைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.