பெண்களுக்கு முத்தம் கொடுப்பது ஏன்? மோகன் வைத்யா ஓபன் டாக்

  0
  1
  மோகன் வைத்யா

  மோகன் வைத்யா பெண்களுக்கு எதற்காக முத்தம் கொடுக்கிறார் என்பது குறித்துக் கூறியுள்ளார். 

  சென்னை: மோகன் வைத்யா பெண்களுக்கு எதற்காக முத்தம் கொடுக்கிறார் என்பது குறித்துக் கூறியுள்ளார். 

  பிக் பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களுள் ஒருவர் மோகன் வைத்யா. எதற்கு எடுத்தாலும் கோபித்துக் கொள்வது, அழுவது போன்ற செயலால் மக்கள் மத்தியில் வெறுப்பைச் சம்பாதித்துக் கடந்த வாரம் வெளியேறினார். மேலும் அங்கு இருக்கும் பெண்களுக்கு முத்தம் கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டதால் இவரை  கிண்டலடித்துப் பல மீம்ஸ்கள் உருவானது . 

  இந்த நிலையில் இவர் பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவரிடம் ஏன் பெண்களுக்கு முத்தம் கொடுக்கிறீர்கள்? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த மோகன் வைத்யா, ‘எனக்கு வெறும் மூன்று சகோதர்கள் மட்டுமே உள்ளன. சகோதரி இல்லை என்று மிகவும் வருத்தம்.அதனால்  பொதுவாகவே பெண்கள் மீது அதிக அன்பைக் காட்டுவேன். அதனால் தான் நான் முத்தம் கொடுப்பதை நான் பழக்கமாக வைத்துள்ளேன். 

  mohan

  அங்கு இருக்கும் அனைத்து பெண்களையும் நான் மகள்களாகவே பார்க்கிறேன். அது தவிர வேறு எந்த தவறான எண்ணமும் எனக்கு இல்லை. நான் 46 வருடங்கள் இசை துறையில் இருக்கிறேன். பல பெண்களுக்குப் பாடல் சொல்லிக் கொடுத்திருக்கிறேன். உண்மையில் நான் மோசமானவனாக இருந்தால் என் பெயர் எப்போதோ கெட்டுப் போயிருக்கும். ஆனால் இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை’ என்று கூறியுள்ளார்.