பெண்களுக்கு சம உரிமையை நோக்கி படிப்படியாக சவுதி அரேபியா!

  0
  1
  Saudi woman driver

  பெண்கள் வாகனங்கள் ஓட்டுவதற்கு இருந்த தடை கடந்த ஆண்டு விலக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால், விரும்பிய இடத்தில் தனியாக வசிக்க, விரும்பியவரை திருமணம் செய்ய அனுமதியைப் பெற வேண்டும் என்பன போன்ற கட்டுப்பாடுகள் இன்னமும் நீடிக்கின்றன.

  வெளிநாடு செல்வதற்கு கணவர் அல்லது தந்தையின் அனுமதியை  பெறவேண்டும் என்ற பெண்களுக்கான கட்டுப்பாட்டை சவுதி அரேபியா நீக்கியுள்ளது. கணவர் அல்லது தந்தையின் அனுமதியின்றி பெண்கள் பாஸ்போர்ட் பெறுவதோ, வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவோ முடியாது. தற்போது, 21 வயதுக்கு மேற்பட்ட ஆணோ பெண்ணோ பயணங்கள் மேற்கொள்வதற்கு அனுமதிப் பெறத் தேவையில்லை எனவும் அரசு ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  Saudi Women

  பாலின அடிப்படையில் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறை நடைபெறுவதாக சவுதி பெண்கள் வெளிநாடுகளுக்கு தப்பியோடுவது, பெண் செயற்பாட்டாளர்கள் பலர் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டது, பாலின சமத்துவ இடைவெளி தொடர்பான குறியீடுகளின் அடிப்படையில், 149 நாடுகளின் பட்டியலில் 141ஆவது நாடாக சவூதி அரேபியா உள்ளது என கடுமையான கண்டனங்களுக்கு மத்தியில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. பெண்கள் வாகனங்கள் ஓட்டுவதற்கு இருந்த தடை கடந்த ஆண்டு விலக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால், விரும்பிய இடத்தில் தனியாக வசிக்க, விரும்பியவரை திருமணம் செய்ய அனுமதியைப் பெற வேண்டும் என்பன போன்ற கட்டுப்பாடுகள் இன்னமும் நீடிக்கின்றன.