பெங்களூரு கல்லூரியில் ஆதித்ய வர்மா ‘துருவ்’!

    0
    6
    Dhruv Vikram

    பெங்களூரு மவுண்ட் கார்மல் கல்லூரியில் இன்று ஆதித்யவர்மா பட கதாநாயகன் துருவ் விக்ரம் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அவரைக்கண்ட மாணவர்களும், ரசிகர்களும் உற்சாகத்தில் செல்பி எடுத்துக்கொண்டு மகிழ்ந்தனர். 

    பெங்களூரு மவுண்ட் கார்மல் கல்லூரியில் இன்று ஆதித்யவர்மா பட கதாநாயகன் துருவ் விக்ரம் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அவரைக்கண்ட மாணவர்களும், ரசிகர்களும் உற்சாகத்தில் செல்பி எடுத்துக்கொண்டு மகிழ்ந்தனர். 

     

     

    ஆதித்ய வர்மா படம் அர்ஜுன் ரெட்டி படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்காகும். இந்த படம் முதலில் இயக்குனர் பாலாவால் வர்மா என்ற பெயரில் இயக்கபட்டது, படத்தை இ4 எண்டர்டெயிண்மென்ட் நிறுவனம் தயாரித்தது. படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு பிறகு படத்தை பார்த்த தயாரிப்பு நிறுவனம் படம் திருப்தியளிக்கவில்லை என்று அந்த படத்தை கிடப்பில் போட்டுவிட்டு, கிரிசய்யாவை வைத்து ஆதித்ய வர்மா என்ற பெயரில் மீண்டும் படமாக்கியது. இந்த படம் நவ.22 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஆதித்ய வர்மா படத்தில் துருவ் விக்ரமுடன் பனிதா சந்து, பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.