புளி ரொட்டி..! புதுசா இருக்கா…? அட்டகாசமாகவும் இருக்கும்!

  0
  1
  புளிரொட்டி

  உங்களுக்கு அரிசி உப்புமா செய்யத் தெரியுமா…அது தெரிந்தால் புளிரொட்டி செய்வது ரொம்ப சுலபம். தெரியாவிட்டாலும் பரவாயில்லை வாருங்கள் கற்றுக்கொள்ளலாம்.

  உங்களுக்கு அரிசி உப்புமா செய்யத் தெரியுமா…அது தெரிந்தால் புளிரொட்டி செய்வது ரொம்ப சுலபம். தெரியாவிட்டாலும் பரவாயில்லை வாருங்கள் கற்றுக்கொள்ளலாம்.

  தேவையான பொருட்கள்

  அரிசி 2 கப்
  துவரம் பருப்பு  ½ கப்
  மிளகு ஒரு ஸ்பூன்
  சீரகம் ஒரு ஸ்பூன்
  தேங்காய் துருவல் 1 கப்
  காய்ந்த மிளகாய் 4
  பெருங்காயம்
  உப்பு
  கடுகு- உளுந்து
  கடலைப்பருப்பு
  கறிவேப்பிலை
  புளி கரைசல்
  கை அகல வாழை இலைத்  துண்டு
  எண்ணெய் 

  indegrints

  எப்படிச் செய்வது

  ஸ்டெப் 1

  அரிசியையும் துவரம் பருப்பையும் மிக்சியில் போட்டு உடைத்துக் கொள்ளுங்கள். அதேபோல மிளகு சீரகத்தையும் ஒன்றிரண்டாக பொடித்து வையுங்கள்.இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெயை  ஊற்றுங்கள்,அது சூடானதும் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதில் காய்ந்த மிளகாய்களை கிள்ளிப்போட்டு, சிறிது பெருங்காயம் சேர்த்து சற்று வதக்கிவிட்டு 5 கப் தண்ணீர் சேர்த்து உப்புப்போட்டு கொதிக்க விடுங்கள். கொதி வந்ததும் மிளகு சீரகத்தூள்,தேங்காய் துருவல்,உடைத்து வைத்திருக்கும் அரிசி,துவரம் பருப்பு சேர்த்து கிளறுங்கள்.பத்து நிமிடத்தில் சுவையான அரிசி உப்புமா தயார். புளி ரொட்டி செய்ய பாதி வெந்ததுமே கடாயை அடுப்பில் இருந்து இறக்கிவிட்டு அடுப்பில் ஒரு தோசைக் கல்லை போடுங்கள்.

  ஸ்டெப் 2 

  இடது கையின் மேல் வாழை இலை துண்டை வைத்துக்கொண்டு அதன் மேல் புளிக்கரைசலை தடவிக்கொள்ளுங்கள்.இப்போது வலது கையில் புளித்தண்ணீரை தொட்டுக்கொண்டு பாதி வெந்த அரிசி உப்புமாவை அள்ளி இலை மேல் வையுங்கள்.மறுபடி கொஞ்சம் புளிக்கரைசலைத் தொட்டுக்கொண்டு இலையில் இருக்கும் உப்புமாவை அடை போல தட்டுங்கள்.

  puli roti

  இபோது அடுப்பில் இருக்கும் தோசை கல்லில் கொஞ்சம்  எண்ணெய் தடவி இடது கையில் தட்டி வைத்திருக்கும் ரொட்டியை தோசைக் கல்லில் இட்டுவிட்டு இலையை எடுத்துக் கொண்டு மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பியுங்கள்.வெந்துகொண்டு இருக்கும் ரொட்டியின் மீது அரைஸ்பூன் எண்ணெய்  விட்டு திருப்பிப் போட மறந்துவிடாதீர்கள்.இப்போது சூடான புளிரொட்டி தயார்.

  இதையும் படிங்க: பூரியும் குடல் குழம்பும் சாப்பிட்டதுண்டா…அவிநாசி அண்ணா உணவகத்துக்கு வாங்க!