புல்வாமா தாக்குதல்; மூளையாக செயல்பட்டவர் சுட்டுக் கொலை

  0
  1
  கோப்புப்படம்

  புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவரை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்

  ஜம்மு: புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவரை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

  ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற வாகனம் மீது குறி வைத்து தீவிரவாதிகள் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 44 பாதுகாப்புப் படை வீரர்களின் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

  புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்று ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை தடை செய்ய வேண்டும் எனவும், அதன் தலைவர் மசூத் அசாரை ஒப்படைக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பான ஆதாரங்களை இந்தியா வழங்கியுள்ள போதிலும், அதனை பாகிஸ்தான் மறுத்து வருகிறது.

  இந்நிலையில், புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவரை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். புல்வாமா தாக்குதலுக்காக வெடிகுண்டுகளை தயாரித்து திட்டம் தீட்டி மூளையாக செயல்பட்டவர் முத்சர் அகமது கான். இன்று அதிகாலையில் டிரால் பகுதியில் சில தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் முத்சர் அகமது கான் உள்பட மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.