புல்வாமா தாக்குதல்: தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் – தந்தை, மகள் கைது

  0
  1
  pulwama

  புல்வாமா தாக்குதல் சம்பவம் தொடர்பாக தந்தை, மகள் என மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  டெல்லி: புல்வாமா தாக்குதல் சம்பவம் தொடர்பாக தந்தை, மகள் என மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் புல்வாமாவில் கடந்த ஆண்டு ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதி நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். இந்த தீவிரவாத தாக்குதல் சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  புல்வாமா தாக்குதலை அரங்கேற்றிய தீவிரவாதி அடில் அகமது தருக்கு அடைக்கலம் கொடுத்த ஷாகீர் பசீர் மேக்ரே என்பவன் கடந்த 28-ஆம் தேதி கைது செய்யப்பட்டான். இந்த நிலையில், விசாரணையில் அவன் அளித்த தகவலின்பேரில் தீவிரவாதிகளுக்கு உதவிய லேத்போராவை சேர்ந்த தந்தை, மகள் ஆகிய மேலும் 2 பேரை தேசிய புலனாய்வு துறையினர் கைது செய்தனர். அவர்கள் இருவரின் பெயர் தாரிக் அகமது ஷா மற்றும் இன்சா தாரிக் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.