புல்வாமா தாக்குதல்: உயிரிழந்த வீரரின் குடும்பத்துக்கு ரோபோ சங்கர் ரூ 1 லட்சம் உதவி

  0
  7
  robo

  புல்வாமா தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர் குடும்பத்துக்கு ரோபோ சங்கர் 1 லட்சம் ரூபாய் அளித்து உதவி.

  தூத்துக்குடி: புல்வாமா தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர் குடும்பத்துக்கு ரோபோ சங்கர் 1 லட்சம் ரூபாய் அளித்து உதவி.

  காஷ்மீர், புல்வாமா மாவட்டத்தில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் 40-க்கும் அதிகமான சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். அந்த வீரர்களின் குடும்பத்துக்கு பலரும் பொருளாதார உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில், பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணி இல்லத்திற்கு சென்று அவர் தந்தையிடம் ஆறுதல் தெரிவித்தார். அதன்பிறகு சுப்பிரமணி நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று மரியாதை செய்த ரோபோ, சுப்பிரமணி தந்தையிடம் ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்