புல்வாமா தாக்குதலுக்கு அமெரிக்கா உதவியா ? – இந்தியப் புலனாய்வுத் துறை விசாரணை

  0
  1
  விர்ச்சுவல் சிம்

  புல்வாமா தாக்குதல் பயங்கரவாதிகள் தகவல் தொடர்புக்கு விர்ச்சுவல் சிம்-களை பயன்படுத்தியதாக இந்தியப் புலனாய்வுத் துறை கண்டறிந்துள்ளது.

  புல்வாமா தாக்குதல் பயங்கரவாதிகள் தகவல் தொடர்புக்கு விர்ச்சுவல் சிம்-களை பயன்படுத்தியதாக இந்தியப் புலனாய்வுத் துறை கண்டறிந்துள்ளது.

  புல்வாமா தாக்குதல் 

  காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பிப்ரவரி 14-ஆம் தேதி, நடத்தப்பட்ட பயங்கரவாத தற்கொலைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் மரணம் அடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த சம்பவத்துக்கு பிறகு இந்தியா – பாகிஸ்தான் இடையே பதட்ட நிலை நிலவி வருகிறது. இந்தியா பாகிஸ்தான் உடனான அனைத்து தொடர்புகளையும் கைவிடுவதாக அறிவித்தது. இந்த தாக்குதல் குறித்து இந்திய புலனாய்வு அமைப்புகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றன.

  புல்வாமா அட்டாக்

  விர்ச்சுவல் சிம்

   இந்நிலையில் புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் தங்கள் திட்டத்தை செயல்படுத்தும் போது சிம் கார்டு இல்லாத அதிநவீன கைபேசி வழியே  தகவல் தொடர்பை கையாண்டுள்ளனர். இந்த சிம் கார்டுகள் ‘விர்ச்சுவல் சிம்’ என்று அழைக்கப்படுகின்றன. கணினி வழியாக தொலைபேசி எண் உருவாக்கப்பட்டு ஸ்மார்ட்போனில் செயலியை டவுன்லோடு செய்வதன் மூலம் அந்த செல்போன் எண்ணைப் பயன்படுத்தலாம். இந்த முறைக்கு சிம் கார்டு தேவைப்படாது. இதுவே ‘விர்ச்சுவல் சிம்’ ஆகும்.

  புல்வாமா அட்டாக்

  இந்த வகை ‘விர்ச்சுவல் சிம்’ மூலமே புல்வாமா தாக்குதல் பயங்கரவாதிகள் தங்களுக்குள் தகவல் பரிமாறிக் கொண்டதையும்  இவை அமெரிக்காவிலிருந்து வழங்கப்பட்டதையும் இந்திய புலனாய்வு அமைப்புகள் கண்டுபிடித்துள்ளன. இவற்றை யார் கொடுத்தார்கள் பணம் எங்கிருந்து வந்தது என்று தெரிந்தால் புல்வாமா தாக்குதல் தொடர்பான விசாரணை அடுத்த கட்டத்தை அடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.