புல்லெட்டிலேயே போய் சபரிமலையில் ஐயப்பனை வழிபடலாம்.. என்ன இது புதுசா இருக்கு!

  0
  1
  BIKE

  தமிழகம் மட்டுமல்லாது அனைத்து பகுதிகளிலும் இருந்து பக்தர்கள் ஐயப்பன் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.

  இந்த ஆண்டு சபரிமலை சீசன் தொடக்கி விட்டது. தமிழகம் மட்டுமல்லாது அனைத்து பகுதிகளிலும் இருந்து பக்தர்கள் ஐயப்பன் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்து வருகின்றனர். சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாக, பைக் மூலம் சென்று ஐயப்பனை வழிபடும் புதிய சேவையை தெற்கு ரயில்வே நிர்வாகம் அமல்படுத்தியுள்ளது.

  ttn

  அதன் படி, கேரளாவிலுள்ள செங்கண்ணூர் ரயில் நிலையத்திலிருந்து சபரி மலை பம்பா வரை வாடகைக்கு பைக்குகள் வழங்கப்படுகின்றன. இது, கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது. 

  ttn

  இந்த வாடகை பைக்குகளுக்கு ஒரு நாளுக்கு ரூ. 1200 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதனைப் பயன்படுத்துபவர்கள் ஒரு 200 கிலோ மீட்டருக்கு மேல் செல்லக் கூடாது. அவ்வாறு மீறி சென்றால், ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.6 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் பைக் எடுத்து 24 மணி நேரத்துக்குள் திருப்பி கொடுக்காவிடில் தாமதமாகும் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ரூ.100 அபராதமாக வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  rttn

  இது குறித்துப் பேசிய திருவனந்தபுரம் ரயில்வே பிரிவு முதன்மை அதிகாரி, கொச்சி காப்பிரைட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பல நிறுவனங்கள் வாடகைக்கு பைக்குகள் வழங்க விருப்பம் தெரிவித்துள்ளன. இதனால், செங்கண்ணூர் ரயில் நிலையம் மட்டுமல்லாது திரிசூர், கோட்டாயம், எர்ணாகுளம் மற்றும்  ஆலப்புழா உள்ளிட்ட கேரளா மாவட்டங்களில் இருந்தும் வாடகை பைக் பெறுவதற்கான திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த பைக் சேவை சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.