புரோ கபடி: இறுதி போட்டிக்கு டெல்லி, பெங்கால் அணிகள் முன்னேற்றம்

  0
  4
  Kabadi

  புரோ கபடியில் நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் வென்று தபாங் டெல்லி மற்றும் பெங்கால் வாரியர்ஸ் இரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கின்றன.

  புரோ கபடியில் நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் வென்று தபாங் டெல்லி மற்றும் பெங்கால் வாரியர்ஸ் இரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கின்றன.

  புரோ கபடி ஏழாவது சீசனில், லீக் போட்டிகளின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த பெங்கால் வாரியர்ஸ் மற்றும் தபாங் டெல்லி இரு அணிகளும் நேரடியாக அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனர். 

  Kabadi

  அதற்கு அடுத்த நான்கு இடங்கள் பிடித்த அணிகள் பிளே-ஆப் சுற்றில் பலப்பரீட்சை மேற்கொண்டன. இதில் மும்பை மற்றும் பெங்களூரு இரு அணிகளும் பிளே-ஆப் சுற்றில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில், நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் மற்றும் தபாங் டெல்லி இரு அணிகளும் மோதின. 

  இதில் தபாங் டெல்லி அணி 44-38 என 6 புள்ளிகள் முன்னிலை பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. டெல்லி அணியின் நட்சத்திர ரைடர் நவீன்குமார் 15 புள்ளிகள் பெற்றுக்கொடுத்து வெற்றிக்கு உதவினார்.

  Kabadi

  இரண்டாவதாக நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், பெங்கால் வாரியர்ஸ் மற்றும் யு மும்பா இரு அணிகளும் பலப்பரிட்சை மேற்கொண்டன. இறுதி நிமிடம் வரை பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில், யார் வெற்றி பெறுவார்? என்ற பதைபதைப்பு ரசிகர்களிடம் நிலவி வந்தது. இறுதியாக, பெங்கால் வாரியர்ஸ் அணி இரண்டு புள்ளிகள் முன்னிலை பெற்று 37-35 என்ற கணக்கில் வென்று இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

  இந்நிலையில் வருகின்ற 19ஆம் தேதி நடைபெறவிருக்கும் இறுதிப்போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் மற்றும் டெல்லி தபாங் இரு அணிகளும் மோதுகின்றன.

  இரு அணிகளும் இறுதிப் போட்டி வரை முன்னேறுவது இதுவே முதல் முறை என்பதால், யார் முதல்முறையாக கோப்பையை வெல்வார்? என்ற எதிர்பார்ப்பு தற்போதிலிருந்தே ரசிகர்களிடம் இருந்து வருகிறது.