புத்துணர்ச்சி தரும் பயிற்சி .. தினமும் 15 நிமிஷம் போதுமே!

  0
  62
  தீப ஒளி

  காலையில் நம் வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி கடவுளை வழிபடுகிறோம். அதே போல் மாலையில் விளக்கேற்றி வழிபடுகிறோம்.

  இந்து மதத்தில் ஆன்மிகத்தோடு ஆரோக்கியமும், அறிவியலும் கலந்தே இருப்பதை நாம் ஒவ்வொரு செயலிலும் கவனிக்கலாம். காலையில் நம் வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி கடவுளை வழிபடுகிறோம். அதே போல் மாலையில் விளக்கேற்றி வழிபடுகிறோம்.

  vilakku

  இப்படி விளக்கேற்றி வழிபடும் போது, சில முறைகளைக் கடைப்பிடித்தால் எண்ணற்ற ஆற்றல்களையும் பலன்களையும் பெறலாம். தினந்தோறும் விளக்கின் முன்னால் ஒரு 15 நிமிடங்கள் நாம் செலவு செய்தால் போதும், அபரிமிதமான பலன்கள் கிடைக்கும். சாதாரணமாக நம் வீட்டிலேயே எல்லோரும் செய்யக்கூடிய ஒரு எளிமையான முறையைத் தான் டாப் தமிழ் நியூஸ் வாசகர்களுக்காகச் சொல்லப் போகிறேன்.

  vilaku

  தினந்தோறும் நாம்  பூஜை அறையில் தீபம் ஏற்றும் போது, அந்த தீப ஒளியை தொடர்ந்து 15 நிமிடம் பார்த்து வந்தால் போதும் பல நன்மைகளை அடையலாம். அந்த தீபத்தில் இருந்து வரும் ஒளியை வெறும் கண்களால், கண்களை அசைக்காமல் பார்க்க வேண்டும். அப்படி பார்க்கும் போது, நமது மனமும் ஒரு நிலையில் குவியும். கண்களுக்கும் மிகவும் நல்லது. கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை, கண் எரிச்சல் போன்ற பல நோய்கள் சரியாகும். எவ்வளவு மனம் பாரமாக இருந்தாலும் சரி குறைந்துவிடும்.

  vilaku

  நமக்கே தெரியாமல் அந்த தீப ஒளியில் இருந்து நிறைய சக்திகள் நமக்கு கிடைக்கப் பெறுவதை உணர்வீர்கள். அந்த சக்திகள் நமக்குள் எண்ணற்ற மாற்றங்களைக் கொண்டு வரும். 
  இந்த எளிய பயிற்சியைத் தொடர்ச்சியாக செய்து வந்தால் மனக் கவலைகள் எல்லாம் தூள் தூளாகிவிடும். எந்தவொரு விஷயத்திலும், முடிவு எடுக்கும் திறன் கைக்கூடும். தீர்க்கமான பார்வையை உடைய நம் கண்களும் புத்துணர்ச்சி பெறும். தீராத ஒற்றைத் தலைவலி சரியாகும்.

  எதையோ பறிக்கொடுத்தது போல் இதுநாள் வரையில் இருந்து வந்தவர்கள், இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால், புத்துணர்ச்சியுடன் காணப்படுவார்கள். ஆசைகள் நம்மை அடக்கிக் கொண்டிருந்தது போய், நான் ஆசைகளை நம் கட்டுக்குள் வைத்துக் கொள்ளும் கலையைக் கற்றுக் கொள்வோம். நிச்சயமாய் ஒரு மண்டலத்திற்கு நாம் புதிய மனிதராய், பிரகாசமாய் காணப்படுவோம். ஒரு மண்டலம் என்பது 48 நாட்கள்.