புத்தாண்டு தினத்தில் சீனாவை முந்திய இந்தியா… 67,385 குழந்தைகள் பிறப்பு

  0
  2
  குழந்தை பிறப்பு

  2020 புத்தாண்டு தினத்தில் உலகிலேயே நம் நாட்டில்தான் அதிகளவில் குழந்தைகள் பிறந்துள்ளன. நேற்றும் மட்டும் நம் நாட்டில் புதிதாக 67,385 பச்சிளம் குழந்தைகள் வெளி உலகை பார்த்துள்ளன.

  சர்வதேச அளவில் மக்கள்தொகை அதிகம் கொண்ட நாடுகளில் பட்டியலில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் நம் நாடு உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்களை தொகை அதிகரித்து வருவதை பார்க்கும் போது சீனாவை நாம் முந்தி விடுவோம் போல் தெரிகிறது. அதனை உறுதி செய்வது போல் புத்தாண்டு தினமான நேற்று (ஜனவரி 1) ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

  பச்சிளம் குழந்தை

  யுனிசெப் அமைப்பு ஆண்டுதோறும் புத்தாண்டு தினத்தில் உலகம முழுவதும் பிறக்கும் குழந்தைகள் குறித்த புள்ளிவிவரத்தை வெளியிட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் அது போன்ற புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த புத்தாண்டு தினத்தில் முதல் குழந்தை தென் பசிபிக் நாடான பிஜியில் பிறந்துள்ளது. நேற்று மட்டும் உலகம் முழுவதுமாக மொத்தம் 3.92 லட்சம் குழந்தைகள் பிறந்துள்ளன.

  பச்சிளம் குழந்தைகள்

  இதில் அதிகபட்சமாக இந்தியாவில் மட்டும் 67,385 குழந்தைகள் பிறந்துள்ளன. இது நேற்று பிறந்த குழந்தைகளில் 17 சதவீதமாகும். அதற்கு அடுத்து சீனாவில் அதிகபட்சமாக 46,299 குழந்தைகள் பிறந்தன. மேலும் நைஜிரியா (26,039), பாகிஸ்தான் (16,787), இந்தோனேஷியா (13,020) மற்றும் அமெரிக்கா (10,452) ஆகிய நாடுகளிலும் கணிசமான அளவில் புதிதாக குழந்தைகள் பிறந்துள்ளன.