புது வடிவில் ஆடி கியூ3.. இந்தியாவிற்கு எப்போது? விலை விபரங்கள்..!

  0
  3
   கியூ3 ரக சொகுசு கார்

  ஜெர்மன் நாட்டின் பிரபல சொகுசு கார் தயாரிக்கும் நிறுவனமான ஆடி நிறுவனம் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக கியூ3 ரக சொகுசு கார்களை விற்பனைக்கு வைத்துள்ளது

  ஆடி நிறுவனத்தின் பிரபல கியூ3 ரக சொகுசு கார் இந்தியாவில் புதிய வடிவில் வர இருக்கிறது. எப்போது? விலை எவ்வளவு? என்பன குறித்து இங்கே காண்போம்.

  ஜெர்மன் நாட்டின் பிரபல சொகுசு கார் தயாரிக்கும் நிறுவனமான ஆடி நிறுவனம் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக கியூ3 ரக சொகுசு கார்களை விற்பனைக்கு வைத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அப்டேட் மூலம் புது புது சிறப்பம்சங்களை பொருத்தி விற்பனையில் முன்னிலை பெற்று வருகிறது. 

  கடந்த 2018 ஆம் ஆண்டு பாரிசில் நடந்த மோட்டார் வாகனங்களுக்கான மிகப்பெரிய சந்தையில் கியூ3 ரக கார்களின் முதல் தலைமுறை வெளியிடப்பட்டது. இரண்டாம் தலைமுறை கியூ3 ரக கார்களை அடுத்த ஆண்டு மே மாத இறுதிக்குள் வெளியிட இருப்பதாக ஆடி நிறுவனம் சில தினங்களுக்கு முன் தெரிவித்ததுள்ளது.

  இந்த இரண்டாம் தலைமுறை கியூ3 ரக மாடல்கள் ஆடியின் ஃபிளாக்‌ஷிப் கியூ8 எஸ்.யு.வி.யை போலவே இருக்கும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்தது.

  இரண்டாம் தலைமுறை கியூ3 ரக கார்களின் சிறப்பம்சங்கள்:

  q3

  1. முன்புறம் ஆக்டோகனல் வடிவம் கொண்ட ஒற்றை ஃபிரேம் கிரில் மற்றும் சிறிய அளவிலான எல்.இ.டி. ஹெட்லேம்ப் கிளஸ்டர், டேடைம் ரன்னிங் லைட்கள்.

  2. பின்புறம் ஸ்பாயிலர், இன்டகிரேட்டெட் பிரேக் லைட்.

  3. உள்புறத்தில் புதிய டேஷ்போர்டு டிசைன், டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் புதிய கிளைமேட் கண்ட்ரோல் யூனிட்.

  4. டிரைவர் அசிஸ்டன்ஸ், அடாப்டிவ் குரூஸ் கண்ட்ரோல், பார்க் அசிஸ்ட், லேன் டிபார்ச்சர் வார்னிங் போன்ற மாடர்ன் தொழில்நுட்பங்கள்.

  5. 148 பி.ஹெச்.பி. பவர், 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் 1.4 லிட்டர் TFSI பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.0 லிட்டர் TDI என்ஜின் என இருவித என்ஜின்களுடன் இந்திய சந்தையில் அறிமுகமாகிறது.

  இந்தியாவில் இதன் எக்ஸ் ஷோரூம் விலை 38 லட்சம் முதல் 46 லட்சம் வரை இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.