புது லுக்கில் ப்ரெஷ்ஷான அஜித்! வைரலாகும் அஜித், ஷாலினி வீடியோ!

  0
  4
  அஜித், ஷாலினி

  தமிழ் சினிமாவில் எப்படி ஒரேயொரு சூப்பர் ஸ்டாராக ரஜினி இருக்கிறாரோ அப்படி, அஜித் தனி மாஸுடன் இருந்து வருகிறார். தன்னுடைய பட நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாமல், எந்தவொரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொள்ளாமல், சினிமா, ஷூட்டிங், வீடு என்று தன்னைச் சுற்றிலும் ஒரு வட்டம் போட்டுக் கொண்டு, விளம்பரங்களில் நடிக்காமல், மேடைகளில் ஏறாமல், கலை நிகழ்ச்சிகள், கல்லூரி விழாக்கள் என்று கல்லா கட்டாமல் இருந்து வருகிற அஜித் குறித்து ஒவ்வொரு புகைப்படம் ரிலீஸானாலே அது மரண மாஸாக சமூக வலைத்தளங்களில் வைரலாகும். 

  அஜித் குறித்து எந்தவொரு புகைப்படங்களோ அல்லது வீடியோக்களோ வெளியானால், அதை அஜித் ரசிகர்கள் அத்தனை மகிழ்ச்சியுடன் ஷேர் செய்து ட்ரெண்ட் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். தங்களது அபிமான நடிகரின் புது கெட்டப்பைக் கொண்டாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அப்படி, தற்போது மனைவி ஷாலினியுடன் அஜித் ஒரு ஹோட்டலுக்குச் சென்றுவிட்டு, திரும்ப காரில் ஏறும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அஜித்தின் இந்த வீடியோவில் இருக்கும் ப்ரெஷ்ஷான புது லுக்கை ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து கொண்டாடி வருகிறார்கள்.