புதுமண தம்பதியினருக்கு நேர்ந்த கொடூரம்! டிரான்ஸ்ஃபார்மரில் இருசக்கர வாகனம் மோதி உயிரிழப்பு! 

  0
  6
  Accident

  சேலத்தில் டிரான்ஸ்ஃபார்மரில் இருசக்கர வாகனம் மோதி, புது மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

  சங்ககிரி ஈ.பி. ஆயில் ரோடு பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார், திருச்செங்கோடு அருகே சத்துமாவு தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கும் கலைச்செல்வி என்பவருக்கும் கடந்த வாரம்தான் திருமணம் நடைபெற்றது.

  Accident

  இந்நிலையில், தம்பதி இருவரும் ராசிபுரத்தில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது சாலை ஓரத்திலிருந்த டிரான்ஸ்ஃபார்மரில் மோதி இருவரும் கீழே விழுந்தனர். இதில் தினேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவிக்கு காலில் அடிப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.