புதுச்சேரியில் நாளை முதல் அனைத்துக் கடைகளும் திறக்கப்படும்- முதலமைச்சர் நாராயணசாமி

  0
  5
  நாராயணசாமி

  கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்தும் அதை தடுக்கும் விதமாக  நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  அதன்படி புதுச்சேரியிலும் மக்கள் ஊரடங்கை கடைபிடித்து வருகின்றனர்.

  கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்தும் அதை தடுக்கும் விதமாக  நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  அதன்படி புதுச்சேரியிலும் மக்கள் ஊரடங்கை கடைபிடித்து வருகின்றனர். புதுச்சேரி மக்கள் அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வருபவர்களுக்கு ஒரு வருட சிறை தண்டனை அளிக்கப்படும் என்று அம்மாநில அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.

  Narayanasamy

  இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி, “ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அனைத்துக் கடைகளும் திறக்கப்படும். அப்படித் திறக்கப்படும் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டும் செயல்படும். அதில் பெட்ரோல் பங்க் உள்பட அனைத்துக் கடைகளும் அடங்கும். மருந்தகங்கள், பால், காய்கறிக் கடைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும். விவசாயம் சார்ந்த பொருள்களின் போக்குவரத்துக்கு தடை இல்லை. உரம், பூச்சிக்கொல்லிகள் விற்பனையகங்கள் வழக்கம்போல் திறந்திருக்கும்” எனக்கூறினார்.