புதுசா எந்த பொருள் வாங்கினாலும் இதை பத்திரமா வெச்சிருங்க! 

  27
   பொருள்

  பண்டிகை காலங்கள் துவங்கிவிட்டது. ஆடி தள்ளுபடியில் ஆரம்பித்து வருஷம் முழுக்கவே எதையாவது சொல்லி தள்ளுபடி விலையில் நம் தலையில் கட்டுவதற்கு பார்ப்பார்கள். அப்படி புதுசு புதுசா சமையலறையில் பயன்படுத்தும் மிக்ஸியில் ஆரம்பித்து பெரிய பொருட்களான ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் வரையில் நாம் கடைகளில் வாங்கும் போது, அந்த பொருட்களின் அட்டைப் பெட்டிகளில் கூடவே சின்ன சின்ன வெள்ளை நிற பாக்கெட்களில் சிலிக்கான் ஜெல்லைப் போட்டிருப்பார்கள்.

  பண்டிகை காலங்கள் துவங்கிவிட்டது. ஆடி தள்ளுபடியில் ஆரம்பித்து வருஷம் முழுக்கவே எதையாவது சொல்லி தள்ளுபடி விலையில் நம் தலையில் கட்டுவதற்கு பார்ப்பார்கள். அப்படி புதுசு புதுசா சமையலறையில் பயன்படுத்தும் மிக்ஸியில் ஆரம்பித்து பெரிய பொருட்களான ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் வரையில் நாம் கடைகளில் வாங்கும் போது, அந்த பொருட்களின் அட்டைப் பெட்டிகளில் கூடவே சின்ன சின்ன வெள்ளை நிற பாக்கெட்களில் சிலிக்கான் ஜெல்லைப் போட்டிருப்பார்கள். சிறுவயதில், அதன் வடிவத்திற்கும், அழகான பேக்கிங்கிற்கும் ஆசைப்பட்டு எடுத்து விளையாடத் துவங்கும். ‘இது விஷம் தொடாதே… என பயமுறுத்தி குப்பையில் தூர எறிவார்கள்… அதையே தான் நாமும் இப்போது நம் பிள்ளைகளுக்குச் சொல்லி தூர எறிகிறோம்.

  silicon

  இனி அப்படியெல்லாம் சிலிக்கான் ஜெல் பாக்கெட்களைத் தூக்கி எறியாதீங்க!  காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சுவதற்காக தான் அந்த ஜெல் பாக்கெட்களை வைத்திருக்கிறார்கள்.  குறிப்பாக எலக்ட்ரானிக் பொருட்களின் பேக்கிங்கில் நிச்சயம் இந்த ஜெல் பாக்கெட் இருக்கும். இனிமே அதைத் தூங்கியெறியாம, அதோட பயன்களைத் தெரிஞ்சுக்கோங்க… நம்ம வீட்டில் தினம் தினம் அதை சரியா பயன்படுத்த ஆரம்பிச்சா அதை வெச்சு நிறைய விஷயங்களைச் செய்யலாம்!
  எப்போதுமே வீட்டில் சமையலறை அதிக ஈரப்பதத்துடன் இருக்கும். சர்க்கரை, உப்பு என்று கெட்டியாகிவிடுவதில் துவங்கி, பிஸ்கெட், வேர்க்கடலை என்று பொருட்களை நமத்துப் போவது வரையில் பிரச்சனை தான். அப்படி மாறாமல் இருக்க இந்த ஜெல் பாக்கெட்களைப் பயன்படுத்தலாம். சமையல் பொருட்களை வைத்திருக்கும் அலமாரிகளில் இந்த ஜெல் பாக்கெட்களைப் போட்டு வைத்தால், எப்போதும் அவை ப்ரெஷ்ஷாகவே இருக்கும். 
  எத்தனைத் தான் பாதுகாப்ப வைத்திருந்தாலும் ஒவ்வொரு வீட்டிலும் நான்கைந்து செல்போன்கள் இருக்கும் போது, யாராவது தண்ணிக்குள்ள போட்டுடறாங்க.. அப்படி அசம்பாவிதம் நடந்தா உடனடியா, பேட்டரி, சிம் கார்டு எல்லாத்தையும் கழட்டிடுங்க… இப்போ இந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட்களை ஒரு அகன்ற பாத்திரத்தில் போட்டு, அதுக்குள்ள மொபைல் போனை அரைமணி நேரம் வெச்சிருந்தீங்கன்னா போதும்.. செல்போன்குள்ள போன ஈரம் எல்லாத்தையும் இந்த பாக்கெட் உறிஞ்சுடும்!

  silicon

  பீரோவுல உங்க தாத்தா, பாட்டி புகைப்படங்கள், பள்ளி சான்றிதழ், வீட்டுப் பத்திரங்கள்னு முக்கியமான ஆவணங்கள் வெச்சிருப்பீங்க. அந்த இடத்துல இந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுகளை போட்டு வெச்சிருந்தீங்கன்னா அவை பாதுகாப்பாவும், புதுசாவும் இருக்கும். 
  காய்கறி நறுக்க பயன்படுத்துகிற கத்தி, வீட்டில் இருக்கிற சின்ன கத்திரிக்கோல் எல்லாத்தையும் ஒரு டப்பாவில் போட்டு வெச்சு, அதில் இந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு வெச்சா அவை எப்போதும் மழுங்கிப் போகாமல் இருக்கும்
  பீரோவில் பூட்டியே சில நகைகளைப் பாதுகாப்பா வெச்சிருப்போம். அடிக்கடி பயன்படுத்தாத நகைகள்னு தனியா இருக்கும். அந்த மாதிரியான நகைகளை ஏதாவது விசேஷத்துக்குன்னு எடுக்கும் போது, அவை பொலிவிழந்து மறுபடியும் பாலீஷ் போட வேண்டிய நிலையில் இருக்கும். நகைப் பெட்டியில் இந்த ஜெல் பாக்கெட்களைப் போட்டு வெச்சா அவை எப்போதும் புதுசு போலவே பளபளப்புடன் இருக்கும்.
  இவ்வளவு ஏன்… குழந்தைகளோட செருப்பு, ஷூக்கள் எல்லாம் வைக்கிற அலமாரியில் இந்த ஜெல் பாக்கெட்களைப் போட்டு வெச்சா அவை துர்நாற்றம் வீசாமல் இருக்கும். எப்போதாவது பயன்படுத்துற ஷூக்களின் உள்ளேயும் போட்டு வெச்சிருக்கலாம். 
  ஆனா முக்கியமான விஷயம்… இந்த ஜெல் பாக்கெட்களை அப்படியே தான் பயன்படுத்தனும். எந்த காரணம் கொண்டும் இவற்றை பிரித்து பயன்படுத்தாதீங்க…