புதிய வேட்பாளர்களுக்கு வாய்ப்புக்கொடுத்த பாஜக! பழைய வேட்பாளர்களுக்கு மவுசு கம்மியோ?

  0
  2
  மோடி

  ஆளும் கட்சியான பாரதிய ஜனதா இம்முறை 18 மாநிலங்களில் புதிய வேட்பாளர்களை அதிகளவில் நிறுத்தியுள்ளது. குறிப்பாக சட்டீஸ்கர், ஆந்திரா, தெ‌லங்கானா, மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய மாநி‌லங்களி்ல் பு‌திய வேட்பாள‌ர்களை பாரதிய ஜனதா அதிக எண்ணிக்கையில் களமிறக்கியுள்ளது. 

  bjp

  சட்டீஸ்கர் மாநிலத்தில் பாரதிய ஜனதாவின் 91 சதவிகித வேட்பாளர்கள் புதியவர்கள் ஆவர். கடந்தாண்டு இங்கு நடைபெற்ற பேரவைத் தேர்தலி‌ல் பா‌ரதிய ஜனதா ‌ஆட்சியை இழந்திருந்த நிலையில் புதுமுகங்களுக்கு அதிக வா‌ய்ப்பு தரப்பட்டுள்ளது. இதற்கு மாறாக உத்தரப்பிரதேசம், பீகார், ஜா‌ர்க்கண்ட், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பழைய முகங்களையே அதிகளவில் பாரதிய ஜனதா களமிறக்கியுள்ளது. 

  congress

  இதேபோல் காங்கிரசும்‌ 1‌8 மா‌நிலங்களி‌ல் புதியவர்களுக்கு அதிகளவில் வாய்ப்பு கொடுத்துள்ளது. ஆந்திராவில்‌ அதிக‌பட்சமாக 92 சதவிகித பு‌திய வேட்பாளர்களை காங்கிரஸ் ‌நிறுத்தியுள்ளது. இதே போல சட்டீஸ்கர், மேற்கு வங்கம், குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிகளவு புதுமுகங்களை காங்கிரஸ் நிறுத்தியுள்ளது. எனினும் கர்நாடகா‌‌, ஜார்க்கண்‌ட், உத்தராகண்ட், ஹரியா‌னா ஆகிய மாநிலங்களில் பழைய வேட்பாளர்களுக்கே காங்கிரஸ் அதிகளவில் வாய்ப்பளித்துள்ளது. கட்சி மாறி‌ வந்தவர்களில் ‌36 பேருக்கு காங்கிரஸ் கட்சி மக்களவை தேர்தலில் வாய்ப்பு தந்துள்ளது. பாரதிய ஜனதாவைப்‌ பொறுத்தவரையில் கட்சி மாறி வந்த 2‌1 பேருக்கு போட்‌டியிட வாய்ப்பு அளித்துள்ளது