புதிய பிங்க் நிற பந்துகளில் இத்தனை விஷயங்களா? கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வம்!

  0
  5
  India Vs Bangladesh

  இந்தியா தனது முதல் பகல் – இரவு டெஸ்ட் ஆட்டத்தை வங்கதேசம் அணிக்கு எதிராக ஆட உள்ளது. இதில் முதன்முதலாக இந்தியா டெஸ்ட் தொடரில் பிங்க் நிற பந்துகளைப் பயன்படுத்தி விளையாட உள்ளது.

  இந்தியா தனது முதல் பகல் – இரவு டெஸ்ட் ஆட்டத்தை வங்கதேசம் அணிக்கு எதிராக ஆட உள்ளது. இதில் முதன்முதலாக இந்தியா டெஸ்ட் தொடரில் பிங்க் நிற பந்துகளைப் பயன்படுத்தி விளையாட உள்ளது. பகல் 1 மணிக்கு துவங்க உள்ள இந்த போட்டியில் வங்கதேசம் டாஸ் வென்று முதலில் பேட் செய்ய தீர்மானித்துள்ளது.

  india

  கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் இந்திய டெஸ்ட் வரலாற்றில் முதன் முறையாக இரவு பகல் ஆட்டமாகவும் முதன்முதலில் பிங்க் நிற பந்துகளில் விளையாட உள்ளது. இந்திய முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சவுரவ் கங்குலி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக பதவி ஏற்ற பின்னர் மேற்கொள்ளப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க முடிவு என்பது குறிப்பிடத்தக்கது.

  pnk ball


  இந்த ஆட்டத்தில் பயன்படுத்தப்படும் பிங்க் நிற பந்துகள் பற்றிய சில தகவல்களைப் பார்க்கலாம். பிங்க் நிற பந்துகள் தயாரிக்க சாதாரண சிகப்பு நிற பந்துகளை விட இரண்டு நாட்கள் அதிகம் ஆகும். அதாவது ஒரு பந்து தயாரிக்க குறைந்தது எட்டு நாட்களாகும். இந்த வகை பந்துகள் இறக்குமதி செய்யப்பட்ட தோல் பொருட்களால்  உருவாக்கப்படுகிறது.

  pink

  இதன் உட்பகுதி தக்கை மற்றும் ரப்பர் பொருட்களால் உருவானது. இதில் மொத்தம் மூன்று இணைப்பு தையல்கள் மற்றும் இரண்டு பிடிமானத் தையல்கள் உள்ளது. ஒவ்வொரு அடுக்கும் 78 தையல்கள் உடையது. ஒரு பந்தின் சராசரி எடை 156 கிராம் ஆகும். இதன் சுற்றளவு 22.5 சென்டிமீட்டர்