புதிய எம்.ஐ டிவி 4X ப்ரோ மற்றும் 4A ப்ரோ ஸ்மார்ட் டிவிக்கள், சியோமி சவுண்ட் பார் ஆகியவை இந்தியாவில் அறிமுகம்

  0
  6
  mi

  சியோமி நிறுவனம் எம்.ஐ டிவி 4X ப்ரோ மற்றும் 4A ப்ரோ ஸ்மார்ட் டிவிக்களையும், புதிய சவுண்ட் பார் ஸ்பீக்கரையும் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

  டெல்லி: சியோமி நிறுவனம் எம்.ஐ டிவி 4X ப்ரோ மற்றும் 4A ப்ரோ ஸ்மார்ட் டிவிக்களையும், புதிய சவுண்ட் பார் ஸ்பீக்கரையும் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

  சியோமி நிறுவனம் எம்.ஐ டிவி 4X ப்ரோ மற்றும் 4A ப்ரோ ஸ்மார்ட் டிவிக்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதில் எம்.ஐ டிவி 4X ப்ரோ மாடல் 55 இன்ச் அளவு 4K டிஸ்பிளே கொண்டது. மேலும் எம்.ஐ டிவி 4A ப்ரோ மாடல் 43 இன்ச் அளவு 1080p டிஸ்பிளே கொண்டது. இந்த புதிய மாடல் டிவிக்களில் அல்மோஜிக் 960X பிராசஸர் மற்றும் சியோமி பேட்ச்வால் இன்டர்ஃபேஸ் இடம்பெற்றுள்ளது. 4X ப்ரோ மாடலில் 2 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரியும், 4A ப்ரோ மாடலில் 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரியும் உள்ளன.

  இவ்விரு புதிய டிவிக்கள் தவிர ரூ.4,999 விலையில் சவுண்ட் பார் ஒன்றையும் சியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஜன.15-ஆம் தேதி இந்த புதிய டிவி மாடல்களும் மற்றும் அதற்கு அடுத்த நாளே சவுண்ட் பாரும் விற்பனைக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பிளிப்கார்ட் இணையதளம், எம்.ஐ.காம் மற்றும் எம்.ஐ ஹோம் ஸ்டோர்ஸ் ஆகியவற்றில் விற்பனைக்கு கிடைக்கும். இந்தியாவில் 4X ப்ரோ மாடலின் விலை ரூ.39,999 என்றும், 4ஏ ப்ரோ மாடலின் விலை ரூ.22,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.