புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை: சவரனுக்கு ரூ.640 உயர்வு!

  0
  9
  astro-kumbam-1-1543-1559724425

  சென்னை: வரலாறு காணாத  வகையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது.

  சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்து வந்தது. அதன் காரணமாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டது. கடந்த சில வாரங்களாகத் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே போகிறது. இந்நிலையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 80 ரூபாய் அதிகரித்து, 3,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி ஒரு சவரன் 640 ரூபாய் அதிகரித்து 29, 440 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 

  இதுவரை இல்லாத அளவிற்கு அதிக விலைக்கு தங்கம் விற்பனை செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். கடந்த 3 வாரங்களில் சவரனுக்கு 3 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்துள்ளது.இப்படியே சென்றால் சில நாட்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு  30 ஆயிரம் ரூபாயை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  தங்கத்தின்  விலை இப்படி உயர்ந்து கொண்டே செல்லும் நிலையில் சாமானிய மக்களுக்குத் தங்கம் என்பது எட்டாத தொலைவிற்குச் சென்றுவிடும் ஒரு பொருளாகி விடுமோ  என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.