புதிதாக சிறைக்கு வரும் கைதிகளுக்கு தனிச்சிறை!

  0
  2
  jail

  இந்தியாவில் அதிவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த, தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

  இந்தியாவில் அதிவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த, தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் எளிதில் பரவக்கூடிய தன்மை கொண்டதால் மக்கள் கூட்டமாக கூட வேண்டாம் என்றும் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகின்றனர். அதே போல சிறைத்துறை அதிகாரிகளும் பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். சிறு குற்றங்கள் செய்த 50% கைதிகள், ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

  ttn

  இந்நிலையில் புதிதாக சிறைக்கு வரும் கைதிகளை தனி சிறையில் அடைக்க வேண்டும் என்று சிறைத்துறை அதிகாரி டிஜிபி சுனில் குமார் சிங் தெரிவித்துள்ளார். புதிதாக வரும் நபர்கள் மூலம், சிறையில் இருக்கும் கைதிகளுக்கு கொரோனா தொற்று பரவாமல் இருக்க இந்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.