புகைப்பிடிப்பதால் பாதிக்கப்படும் குழந்தைகள்- ஆய்வில் பகீர் தகவல்

  0
  13
  ss

  பெற்றோர்கள் புகைப்பிடிப்பதால் மறைமுகமாக 40 சதவீதம் குழந்தைகள் பாதிப்படைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

  பெற்றோர்கள் புகைப்பிடிப்பதால் மறைமுகமாக 40 சதவீதம் குழந்தைகள் பாதிப்படைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

  உலக அளவில் 80 முதல் 90 சதவீதம் இளைஞர்கள் புகையிலைப் பழக்கத்திற்கு ஆளாகி இருப்பதாக உலக சுகாதார நிறுவன புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. புகை பிடிப்பது உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கும், புகை நமக்கு பகை, என்ற வாசகங்களை திரையரங்குகளிலும், சிகெரட் பாக்கெட்களிலும் நாம் பார்ப்பதுண்டு. ஆனால் அதனை பார்த்த பின்பு பலரும் சிகரெட் குடிப்பதை நிறுத்தவில்லை. சிகரெட் புடிப்பதால் வாய்ப்புற்றுநோய் வரக்கூடும் என்ற விளம்பரத்திற்கு இளைஞர்கள் அசரவில்லை. இப்படி எல்லைமீறி சென்றுக்கொண்டிருக்கும் இளைஞர்கள், ஒருநாள் பெற்றோர்களாகும்போது அவர்களது குழந்தைகள் 40 சதவீதம் பாதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. 

  11

  அதாவது ஒவ்வொரு ஆண்டும் புகைப்பிடிப்பதால் 60 லட்சம் பேர் உயிரிழந்து வருகின்றனர். அதேபோல் ஆண்டுக்கு 25 லட்சம் பேர் புற்றுநோய்க்கு ஆளாகின்றனர். தொடர்ந்து புகை பிடிப்பவர்களுக்கு நுரையீரல், வாய், சிறுநீர்ப்பை, மார்பகம் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் செல் தொற்று ஏற்படும் என்றும் இதனால் உயிரிழப்பு ஏற்படக்கூடும் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. அப்படியே நம் உடம்பில் புற்று நோயை தாங்கக்கூடிய சக்தி இருந்தால், ஆஸ்துமா, காச நோய், மாரடைப்பு போன்ற பரிசுகளை புகையிலை கொடுக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். 

  உலக அளவில் ஆண்கள் 47 சதவீதமும் பெண்கள் 12 சதவீதமும் புகை பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளதாகவும் புகைப்பிடிக்கும் பெற்றோர்களால் 40 சதவீதம் குழந்தைகள் பாதிப்படைந்துள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆண்டுக்கு 80 லட்சம் குழந்தைகள் புற்றுநோய் அல்லது வேறு ஏதாவது நோய்க்கு ஆளாக்கப்படுகின்றனர்.