புகைப்பதை நிறுத்து ! 6 நாள் லீவு எடுத்துக்கோ ! ஜப்பான் நிறுவனத்தின் அதிரடி !

  0
  2
  மாதிரி படம்

  ஜப்பானில் பணியின்போது சிகரெட் பிடிக்காத ஊழியர்களுக்கு கூடுதலாக 6 நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளது.
  டோக்கியோ நகர அரசு 2020 ஒலிம்பிற்கு முன்னதாக புகை பிடிப்பதற்கு எதிரான கடுமையான விதிகளை நிறைவேற்றியுள்ளது. ஜப்பானில் நிறுவனங்கள் சில தங்கள் ஊழியர்கள் சிகரெட் பிடிப்பதை நிறுத்த முயற்சிகள் மேற்கொள்கிறது. 

  cigreete

   இந்நிலையில் டோக்கியோவில் பியாலா இன்க் நிறுவனம் என்ற நிறுவனம் தங்களது ஊழியர்கள் புகைப்பிடிப்பதை நிறுத்த ஒரு சலுகை அறிவித்துள்ளது. அந்த நிறுவனத்தில் புகைபிடிக்கவேண்டும் என்றால் 29வது மாடியில் இருந்து தரைதளத்திற்கு செல்லவேண்டும். இதற்கு 15 நிமிடங்கள் ஆகும். இதனால் பல ஊழியர்கள் சிகரெட் பிடிக்க செல்வதில்லை. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளாகி உற்பத்தி பாதிப்பதாக பியாலா நிர்வாகத்திற்கு சென்றுள்ளது. ஒரு ஊழியர் புகைபிடிப்பதை நிறுத்தும் போது ஏற்படும் உளவியல் சிக்கலினால்தான்  உற்பத்தி திறன் பாதிக்கிறது என்ற அறிந்து கொண்ட அந்த நிறுவனம் பணியின்போது புகை பிடிக்காமல் இருப்பவர்களுக்கு கூடுதலாக 6 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.

  japan

  இதனால் ஊழியர்களும் சிகரெட் இல்லையென்றாலும் பரவாஇல்லை விடுமுறை கிடைக்கிறது என்று சந்தோஷப்படுகிறார்களாம். சிகரெட் பிடிப்பதற்காக அபராதம் அல்லது உத்தரவு போடுவதற்கு பதில் இந்த நடைமுறை அந்த நிறுவனத்திற்கு நல்ல பலனை கொடுத்துள்ளது. அது சரி ஒருவேளை புகைப்பழக்கமே இல்லாதவர்களுக்கு நிறுவனம் எந்த விதமான சலுகை அளிக்கப்போகிறது என்பதுதான் நமக்கு எழுந்துள்ள கேள்வி. ஒருவேளை கூடுதல் விடுமுறை வேண்டும் என்றால் சிகரெட் பிடிக்க கற்றுக்கொள்ளவேண்டுமா என்றெல்லாம் கேட்கவேண்டாம்.