புகுந்த வீட்டிற்குச் செல்லும் மணப்பெண்ணை ஏன் முதலில் குத்துவிளக்கை ஏற்றச் சொல்கிறார்கள்?

  0
  1
  குத்துவிளக்கு

  திருமணத்தை ஏன் ஆயிரம் காலத்துப் பயிர் என்று முன்னோர்கள் சொன்னார்கள்.நெல், கம்பு, கரும்பு போன்ற பயிர்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் மகசூல் கொடுத்து விடும். ஆனால், திருமணம் என்பது அனைத்துக் காலத்திலும், பிரச்சனைகளை சமாளித்து, மகசூல் கொடுக்கும் பயிர் என்ற அர்த்தத்தில் முன்னோர்கள் கூறினர்.  

  திருமணத்தை ஏன் ஆயிரம் காலத்துப் பயிர் என்று முன்னோர்கள் சொன்னார்கள்.நெல், கம்பு, கரும்பு போன்ற பயிர்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் மகசூல் கொடுத்து விடும். ஆனால், திருமணம் என்பது அனைத்துக் காலத்திலும், பிரச்சனைகளை சமாளித்து, மகசூல் கொடுக்கும் பயிர் என்ற அர்த்தத்தில் முன்னோர்கள் கூறினர்.  

  marriage

  கணவனும்,மனைவியுமாக இருவரும் சேர்ந்து அடுத்தடுத்த ஜென்மங்களிலும் மனம் ஒத்து வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன் அதனை ஆயிரம் காலத்துப் பயிர் என்று குறிப்பிட்டனர்.

  திருமணத்தில், மணப்பெண்ணை அழைத்து குத்துவிளக்கை ஏற்றச் சொல்வதில் வாழ்க்கைத் தத்துவம் அடங்கியிருக்கிறது.குத்துவிளக்கில்  மொத்தம் ஐந்து முகங்கள் இருப்பதை கவனித்திருப்பீர்கள்.அந்த ஐந்து முகங்களும் அன்பு, அறிவு, உறுதி, நிதானம்,பொறுமை போன்ற ஐந்து நற்குணங்களை குறிக்கிறது. 

  lamp

  குத்துவிளக்கின் ஐந்து முகங்கள், ஐந்து கடவுள்களையும் குறிக்கிறது.
  தாமரைப் போன்ற பீடம்  பிரம்மாவையும், குத்துவிளக்கின் நடுத்தண்டு பகுதி விஷ்ணுவையும், மேலே அகல் போன்ற பகுதி சிவனையும்,  தீபம்  திருமகளையும், ஒளியைத் தருகின்ற சுடர் கலைமகளையும் குறிக்கின்றது.
  அதனால் தான் திருமணம் முடிந்து முதன்முதலில் புகுந்த வீட்டிற்கு செல்லும் மணப்பெண், ‘நான் இந்த ஐந்து நற்குணங்களையும் கொண்டிருப்பேன்’ என்று உறுதியளிப்பதாக குத்துவிளக்கை ஏற்ற சொல்கிறார்கள். 

  குத்துவிளக்கை ஏற்றி வைத்து, குத்துவிளக்கில் உள்ள ஐந்து கடவுள்களையும் வணங்கி, குத்துவிளக்கில் இருந்து வரும் ஒளியால் வீடு முழுவதும் எப்படி பிரகாசம் அடைகிறதோ, அதேபோல் புகுந்த வீட்டில் வாழ வந்த பெண்ணின் வாழ்க்கையும் பிரகாசமாக இருக்கும் என்பது ஐதீகம்.

  lamp

  அன்பு, உதவி, அரவணைப்பு, ஆறுதல், நம்பிக்கை இவை போன்ற பல பகுதிகள் இணைந்தது தான் இல்வாழ்க்கை. இந்த உண்மையை புரிந்து கொண்டவர்கள் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.