பீலா ராஜேஷ் குறித்து பேஸ்புக்கில் அவதூறு பதிவு : சுப.உதயகுமார் மீது வழக்குப்பதிவு

  0
  1
  சுப.உதயகுமார்

  அந்த புகாரின் பேரில், கோட்டார் போலீசார் சுப.உதயகுமார்  மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

  கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவ ஆரம்பித்ததில் இருந்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷும் கடுமையாக உழைத்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் கொரோனா வைரஸ் பற்றிய தகவலை உடனுக்குடன் சமூக வலைதளங்கள் மூலமாகவோ, செய்தியாளர்கள் சந்திப்பின் மூலமாகவோ கொடுத்து வருகின்றனர். 

  ttn

  இந்நிலையில் பீலா ராஜேஷ் பற்றி அணுஉலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் அவரது பேஸ்புக் பக்கத்தில் அவதூறாக கருத்து பதிவிட்டதாகவும், அரசுக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்றை பேஸ்புக்கில் பகிர்ந்ததாகவும் கூறப்படுகிறது. அதனால் அவர் மீது வடிவீஸ்வரம் கிராம நிர்வாக அதிகாரி மோகன் என்பவர் சுப.உதயகுமார் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில், கோட்டார் போலீசார் சுப.உதயகுமார்  மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.