பீர் சாப்பிட்டுட்டு சரக்கடிக்கலாமா! சரக்கடிச்சதுக்கு அப்பறம் பீர் சாப்பிடலாமா!?

  0
  3
  beer

  நாளுக்கு நாள் வெய்யிலின் அளவு கூடிக்கொண்டே போகிறது என்பதை, பகல் நேரத்தில் வெளியில் போகும்போது நீங்களே உணர்ந்திருப்பீர்கள்

  ‘Beer before wine and you’ll be fine;Wine before beer and tou’ll be queer!’ இது உலகப் புகழ் பெற்ற பழமொழி. இப்போ எதுக்காக இந்தப் பழமொழி என்றுதானே கேட்கிறீங்க! இந்த செய்தியை முழுசா படியுங்க பாஸ்…

  நாளுக்கு நாள் வெய்யிலின் அளவு கூடிக்கொண்டே போகிறது என்பதை, பகல் நேரத்தில் வெளியில் போகும்போது நீங்களே உணர்ந்திருப்பீர்கள். திடீரென முளைத்திருக்கும் பழக்கடைகள், மோர் பானைகள் சொல்லும் உண்மைகள், வரும் ஏப்ரல், மே மாதங்களில் வெய்யில் எப்படியிருக்கும் என்பதற்கு சாட்சி! 

  beer drinking

  சுடச்சுட கொடுக்கும் டீக்கடைகளின் வியாபாரம் டல்லாகி, டாஸ்மாக் பார்களில் ‘ஜில்’ லென எகிறும் கூட்டம். முதல் நாள் இரவு குடிக்கும் போது ஜாலி குடியோ, ஓசி குடியோ… அளவு கூடினால், மங்காத்தா அஜித் மாதிரி அடுத்தநாள் எழுந்திருக்கும் போதே ஹேங் ஓவர் பின்னியெடுத்திரும்!

  அப்படித்தான் கோளாறு சொல்லுவாங்க மச்சி! எங்க ஊர்ல ஒரு பெருசு இருந்துச்சு. நூறு வயசுக்கு மேல இருக்கும்… சாகுறதுக்கு முதல்நாள்வரை குடிச்சுக்கிட்டுதான் இருந்தார்! என்று ஆரம்பிக்கும் நண்பர்கள், பாதிப்பில்லாமல் குடிப்பது எப்படின்னு அட்வைஸ்களை அப்படியே ரவாகக் கொடுக்கப்பார்ப்பார்கள் அதை மட்டும் நம்பிறாதிங்க!

  அப்படி சொல்லப்படும் உலகப் புகழ் அட்வைஸ்களில் ஒரு பழமொழிதான் நாம் முதல் பாராவில் சொன்னது. முதலில் கொஞ்சம் பீர் சாப்பிட்டுவிட்டு சரக்கடித்தால் நீ ஜாலி, முதலில் சரக்கடித்துவிட்டு அப்புறம் பீர் சாப்பிட்டால் நீ காலி, என்று அதை குத்து மதிப்பாக மொழி பெயர்க்கலாம்! இதே போல நம்ம ஊரிலும் பல நம்பிக்கைகள் உண்டு. ஒரு சீஸ் துண்டு, அல்லது பொறித்த மீன் சாப்பிட்டுவிட்டு சரக்கடித்தால், எவ்வளவு குடித்தாலும் ஏறாது, நோ ஹேங்கோவர் என்பார்கள். அது கூட வேண்டாம் பாஸ் கொஞ்சம் காரப்பொறியை சைட் டிஸ்ஸா வச்சுக்கிட்டு சாப்பிடுங்க, பொறி அப்படியே ஆல்கஹாலை உருஞ்சிக்கும் போதையே ஏறாது என்பார்கள்.

  cambridge university

  இங்கிலாந்து நாட்டில் இருக்கும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் இந்தக் காமெடிகளை சீரியசாக எடுத்துக்கொண்டு ஒரு ஆய்வை நடத்தி இருக்கிறது. இருபது வயசைத் தாண்டாத 105 இளைஞர்களை இந்த பரிசோதனைக்கு தேர்ந்தெடுத்தது. அவர்களில் பாதிப்பேர் பெண்கள். இந்த இளைஞர்களை மூன்று குரூப்பாகப் பிரித்தது.

  குரூப்-ஏ வாலண்டியர்களுக்கு அவர்கள் ரத்தத்தில் ஆல்கஹால் அளவு.0.05 வரும்வரை பீர் வழங்கப்பட்டது. அதன் பிறகு அது இரட்டிப்பாகும் வரை ஒயின் வழங்கப்பட்டது. குரூப் பி-க்கு முதலில் ஒயின் வழங்கப்பட்டது. அவர்களின் ரத்தத்தில் ஆல்கஹால் அளவு 0.05 ஆனதும் அது இரட்டிப்பாகும்வரை பீர் வழங்கப்பட்டது. மூன்றாவது சி அணிக்கு மொத்தமும் பீரே வழங்கபட்டது.

  மறுநாள் இதை அப்படியே உல்டாவாக மாற்றி கொடுக்கப்பட்டது. குரூப் ஏ-வுக்கு முதலில் ஒயினும், பிறகு பீரும் வழங்கப்பட்டது. அதே போல் குரூப் பி-க்கு முதலில் பீரும் அதன் பிறகு ஒயினும் வழங்கப்பட்டது. முதல் ரவுண்டில் வயிறு முட்ட பீர் குடித்த சி-அணிக்கு இந்த முறை ஒயின் மட்டும் வழங்கப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் மக்களின் நம்பிக்கையை பார்த்து கை கொட்டிச் சிரித்து விட்டது.

  குடிக்கும் போது  முதலில் எந்தவகையான சரக்கில் ஆரம்பித்து என்பதிலில்லை சிக்கல்! அளவு எவ்வளவு என்பதில்தான் இருக்கிறது சூட்சுமம். அளவுக்கு மீறினால் ஹேங் ஓவரும் நிச்சயம்! என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வுகள் அறிவியல் பூர்வமாக நிரூபித்து விட்டன!

  beer

  ஸோ, இன்னும் பல கோடைகளைக் கொண்டாட்டமாக அனுபவிக்கணும்னு  ஆசையிருந்தால்,அளவாக குடியுங்கள்; ச்சியேர்ஸ்!