பீரை ருசிக்க வந்த நாக பாம்புவின் தலை பீர் பாட்டிலுக்குள் சிக்கியதால் பரிதாபம்!

  0
  2
  Dunzo delivery

  பீர் குடிக்க கேனுக்குள் தலையை விட்ட நல்லபாம்பு, அந்த கேனிலேயே சிக்கிக்கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. 

  பீர் குடிக்க கேனுக்குள் தலையை விட்ட நல்லபாம்பு, அந்த கேனிலேயே சிக்கிக்கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. 

  ஒடிசாவின் மயூர்கஞ்ச் மாவட்டத்திலுள்ள பரிபடா வனப்பகுதியில் மது அருந்திய கும்பல் ஒன்று  அங்கேயே பீர் கேன் மற்றும் குப்பைகளை வீசிவிட்டு சென்றிருக்கிறது. விஷ தன்மையும், விஷம தன்மையும் கொண்ட நாக பாம்பு ஒன்று அந்த பாட்டிலிருந்த பீரை குடிக்க முயன்றுள்ளது. அப்போது அதன் தலை அந்த பீர் கேனுக்குள் சிக்கிக்கொண்டது. 

  cobra

  திணறியபடி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நாகப்பாம்பை பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தார். அவர்கள் விரைந்து வந்து பாம்பை மீட்டனர், இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.