பீனிக்ஸ் மாலுக்கு சென்று திரும்பிய தம்பதிக்கு கொரோனா உறுதி!

  0
  2
  corona virus

  தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

  தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், சென்னை முதலிடத்திலும், திண்டுக்கல்,  ஈரோடு மாவட்டங்கள் 2ஆம் இடத்திலும் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்னர், சென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மாலில் வேலை பார்த்து வந்த ஊழியர்களுக்கு, கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். 

  ttn

  அதனால், மார்ச் 10 முதல் மார்ச் 17 வரை சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மால் வணிக வளாகத்துக்கு குறிப்பாக லைப் ஸ்டைல் கடைக்கு சென்றவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்தால் உடனே மாநகராட்சி நிர்வாகத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை பீனிக்ஸ் மாலுக்கு  சென்று திரும்பிய சவுகார்பேட்டையைச் சேர்ந்த தம்பதிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் இரண்டு பேரும் நந்தம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குழந்தைகள் இரண்டு பேரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.