பி.எஸ்.4 ரக வாகன தயாரிப்பு நிறுத்தம்… மத்திய அரசின் முடிவல்ல…. அது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு….

  0
  8
  நிர்மலா சீதாராமன்

  மார்ச் 31ம் தேதிக்கு பிறகு பி.எஸ். 4 ரக வாகனங்களை தயாரிப்பு மற்றும் விற்பனை கூடாது என்பது மத்திய அரசின் முடிவல்ல. அது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

  காற்று மாசுவால் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் உயிர் இழக்கின்றனர். அதனால் காற்று மாசுவை குறைக்க அனைத்து நாடுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. காற்று மாசுவுக்கு வாகனங்கள் வெளியிடும் நச்சுப்புகையும் ஒரு காரணம். எனவே வாகன புகையை குறைக்க வாகன என்ஜின் தயாரிப்பு மற்றும் எரிபொருள் தரத்துக்கு விதிமுறைகள் வகுப்பட்டுள்ளது.

  உச்ச நீதிமன்றம்

  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறுகையில், 2020 மார்ச் 31ம் தேதிக்கு பிறகு ஸ்கூட்டர் அல்லது எந்தவொரு பி.எஸ்.4 ரக வாகனங்களின் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு அனுமதி கிடையாது என்பது மத்திய அரசின் முடிவல்ல. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவாகும். 

  வாகன என்ஜின்

  பி.எஸ்.6 எரிபொருள் விதிமுறைகள் 2020 ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. பி.எஸ்.6 விதிமுறைகளை பூர்த்தி செய்ய என்ஜின்கள் மற்றும் உதிரிபாகங்களை தயாரிக்க வாகன துறை மாற வேண்டிய கட்டத்தில் இருந்தது. வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி. வரியை குறைப்பது தொடர்பாக ஜி.எஸ்.டி. கவுன்சில்தான் முடிவு செய்யும் என தெரிவித்தார்.