பி.எஸ்.என்.எல் ரூ.1188 பிரீபெய்டு ரீசார்ஜ் பிளானில் அதிரடி மாற்றம்

  0
  3
  bsnl

  பி.எஸ்.என்.எல் நிறுவனம் ரூ.1188 பிரீபெய்டு ரீசார்ஜ் பிளானில் முக்கியமான ஒரு மாற்றத்தை செய்துள்ளது.

  டெல்லி: பி.எஸ்.என்.எல் நிறுவனம் ரூ.1188 பிரீபெய்டு ரீசார்ஜ் பிளானில் முக்கியமான ஒரு மாற்றத்தை செய்துள்ளது.

  கடந்தாண்டு ஜூலை மாதம் விளம்பர சலுகையாக ரூ.1188 என்ற பிரீபெய்டு ரீசார்ஜ் பிளானை அறிமுகம் செய்தது. இதன் மூலம் நாளொன்றுக்கு 250 நிமிடங்கள் வாய்ஸ்கால், 5 ஜிபி அதிவேக இன்டர்நெட், 1200 எஸ்.எம்.எஸ் ஆகியவை பலன்களை பெற முடியும். கடந்தாண்டு அக்டோபர் மாதம் வரை மட்டுமே இந்த ரீசார்ஜ் பிளான் கிடைக்கும் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்தாண்டு ஜனவரி 21 வரை அது நீட்டிக்கப்பட்டது. தற்போது மீண்டும் ஒருமுறை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு மார்ச் 31 வரை இந்த ரீசார்ஜ் பிளான் செயல்பாட்டில் இருக்கும். விருப்பபடுபவர்கள் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

  bsnl

  இந்நிலையில், ரூ.1188 பிரீபெய்டு ரீசார்ஜ் பிளானில் முக்கியமான ஒரு மாற்றத்தை பி.எஸ்.என்.எல் நிறுவனம் செய்துள்ளது. அதாவது இந்த ரீசார்ஜ் பிளானின் வேலிடிட்டி 300 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக அது 365 நாட்களாக இருந்தது. சென்னை மற்றும் தமிழ்நாடு வட்டார மக்கள் இந்த ரூ.1188 பிரீபெய்டு ரீசார்ஜ் பிளானை மார்ச் 31 வரை பயன்படுத்த முடியும். அதற்கு பிறகு இந்த ரீசார்ஜ் திட்டம் அதிகாரப்பூர்வமாக பி.எஸ்.என்.எல் ரீசார்ஜ் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.