பி.ஆர். அம்பேத்கர் நினைவிடம் முக்கிய சுற்றுலா மையமாக உருவெடுக்கும்… சரத் பவார் தகவல்..

  0
  3
  பி.ஆர். அம்பேத்கர் நினைவிடம் (மாதிரி)

  மும்பையில் கட்டப்பட்டு வரும் பி.ஆர். அம்பேத்கர் நினைவிடம் அடுத்த சில ஆண்டுகளில் முக்கிய சுற்றுலா தளமாக உருவெடுக்கும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்தார்.

  மும்பை தாதரில் உள்ள இந்து மில்லில் சட்டமேதை பி.ஆர். அம்பேத்கருக்கு மகாராஷ்டிரா அரசு நினைவிடம் கட்டி வருகிறது. முந்தைய பா.ஜ.க. அரசில் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. அப்போது முதல்வராக இருந்த தேவேந்திர பட்னாவிஸ் நினைவிட பணிகள் 2020ம் ஆண்டுக்குள் முடிவடையும் என தெரிவித்து இருந்தார். ஆனால் இந்த நினைவிட பணிகள் நிறைவடைய மேலும் சில ஆண்டுகள் ஆகும் என தெரிகிறது.

  சரத் பவார்

  இந்த சூழ்நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அம்பேத்கர் நினைவிடம் குறித்து கூறியதாவது: பி.ஆர். அம்பேத்கர் நினைவிடம் மும்பைக்கு மட்டுமல்ல நாட்டின் முக்கிய அடையாளமாக இருக்கும். அடுத்த சில ஆண்டுகளில் அம்பேத்கர் நினைவிடம் முக்கிய சுற்றுலா பகுதியாக  உருவாகும். தற்போது 25 சதவீத நினைவிட பணிகள் முடிவடைந்து விட்டது.

  அம்பேத்கர் நினைவிடம் (மாதிரி)

  அம்பேத்கர் நினைவிட கட்டுமான பணிகளை பிரபலமான நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்த நினைவிட கட்டுமான பணிகளை அவர்கள் ஒரு சவாலாக எடுத்து மேற்கொண்டால் 2 ஆண்டுக்குள் பணிகள் முடிவடைந்து விடும். இந்த நினைவு சின்னம் மக்களை கவர்ந்து இழுக்கும், அவர்கள் அங்கு சென்று பெரிய மனிதரின் ஆசிர்வாதத்தை கோருவார்கள். இந்த நினைவுச்சின்ன பணிகள் சர்வதேச சாதனை என்பதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும். அதேசமயம் இந்த நினைவுச்சின்னத்தை மிகவும் கவனமாக பராமரிப்பதும் முக்கியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.