பிள்ளையோ பிள்ளை தொல்லையோ தொல்லை: முக ஸ்டாலினின் நிலை குறித்து நக்கலடித்த அமைச்சர் ஜெயக்குமார்!

  15
  Minister Jayakumar

  மு.க ஸ்டாலினும் தன் மகன் அரசியலுக்கு வந்ததால் உதயநிதிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். 

  திமுக தலைவர் மகன், உதயநிதி ஸ்டாலின் ஒரு கல் ஒரு கண்ணாடி, மனிதன், கெத்து,இது கதிர்வேலன் காதல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.  முக ஸ்டாலினின் குடும்பமே கட்சியில் ஈடுபட்டிருந்தும் உதயநிதி அவ்வளவாக அரசியலில் ஆர்வம் காட்டவில்லை. திடீரென உதயநிதி அரசியலில் குதித்து திமுக இளைஞரணியின் செயலாளர் ஆனார். அதன் பின், எல்லா அரசியல் கூட்டங்களிலும் கலந்து கொண்டு தனது தந்தையுடன் இணைந்து செயலாற்றி வருகிறார். மு.க ஸ்டாலினும் தன் மகன் அரசியலுக்கு வந்ததால் உதயநிதிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். 

  MK Stalin

  இது குறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், திமுக தலைவர் தன் மகன் உதயநிதி ஸ்டாலினை முன்னிலைப் படுத்துவதால் திமுகவின் மூத்த உறுப்பினர்கள் சட்டசபைத் தேர்தலில் தோல்வியை வரவேற்பார்கள் என்று கூறியுள்ளார். மேலும், பிள்ளையோ பிள்ளை தொல்லையோ தொல்லை என்பது தான் இப்போது ஸ்டாலினின் நிலை என்று நக்கலடித்துள்ளார். அவர் கூறியதை போலவே, நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்ட  திமுக உறுப்பினர்கள் சட்டசபைத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்து வருகின்றனர்.