பிள்ளைகள் கல்யாணத்தில் ஒன்று சேர்ந்த பெருசுகள் -ஓடிப்போன சம்பந்திகளால் வாடிப்போன மணமக்கள்.. –

  0
  4
  representative image

  தங்களின் பிள்ளைகளுக்கு கல்யாண ஏற்பாடு செய்தபோதுதான் தெரிந்தது அவர்களிருவரும் இளமைக்கால காதலர்களென்று.அதற்கு பிறகு பெண்ணின் அம்மாவும்,மாப்பிளையும் அப்பாவும் மீண்டும் தங்ளின் காதலை ரெனிவல் செய்து பிள்ளைகளின் கல்யாணத்திற்கு முன்பே ஊரைவிட்டு ஓடி விட்டனர்.

  குஜராத்தைச் சேர்ந்த ஒரு நடுத்தர வயது தம்பதியினர் தங்களின் பிள்ளைகளுக்கு கல்யாண ஏற்பாடு செய்தபோதுதான் தெரிந்தது அவர்களிருவரும் இளமைக்கால காதலர்களென்று.அதற்கு பிறகு பெண்ணின் அம்மாவும்,மாப்பிளையும் அப்பாவும் மீண்டும் தங்ளின் காதலை ரெனிவல் செய்து பிள்ளைகளின் கல்யாணத்திற்கு முன்பே ஊரைவிட்டு ஓடி விட்டனர்.பிறகு சில நாட்களுக்கு பிறகு அவரவர்  வீடுகளுக்குத் திரும்பிய ஒரு மாதத்திற்குப் பிறகு மீண்டும் அவர்கள் ஓடிவிட்டதாக அவர்களது குடும்ப வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.

  parents elhop

  சூரத் நகரைச் சேர்ந்த ஹிம்மத் பாண்டவ் (46) மற்றும் நவ்சரியைச் சேர்ந்த ஷோப்னா ராவல் (43) ஆகியோர் இந்த ஆண்டு ஜனவரியில் அவர்களின்  மகன் மற்றும் மகளின் திருமணத்திற்கு திட்டமிடப்பட்ட நாளுக்கு  முன்பே ஓடி திரும்பி வந்து மீண்டும் ஓடிவிட்டனர்.

  பாண்டவ் மற்றும் ராவல் ஆகியோர்  ஓடிப்போய்  சூரத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருப்பதாகவும் இருப்பினும், கடந்த முறை போலல்லாமல், இருவரையும் ‘காணவில்லை’ என்று போலீஸ் புகார் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றும் கூறினர் .